ads
வயர் இல்லாமல் சார்ஜிங் செய்யும் புதிய முறை அறிமுகம்
ராசு (Author) Published Date : Apr 28, 2018 18:14 ISTTechnology News
வேகமாக வளர்ந்து வரும் தொழிநுட்ப உலகில் நம்முடைய அன்றாட தேவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. உணவைக் கூட அந்தந்த வேளைகளில் எடுத்துக்கொள்ளாமல் கிடைக்கும் நேரத்திலேயே உண்கிறோம். தட்டில் சோற்றைப் பார்த்து பசியாறுவதை விட, கண்களுக்கும் செவிக்கும் விருந்து சேர்க்கும் வகையில் வகையில் அமைந்த காணொளிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இன்று புதிய அறிமுகமாக, ஸ்மார்ட்போனை வயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் புதிய கருவி (பெல்கின் பூஸ்ட் அப் ) தற்போது சந்தையில் வந்துள்ளது. பெல்கின் என்ற அமெரிக்கா நிறுவனம் இந்த கருவியை உருவாகியுள்ளது. 6,999 ரூபாய்க்கு அமேசானில் ஏப்ரல் 30 முதல் ஆர்டர் செய்ய இயலும். மேற்கத்திய நாடுகளில் இந்தக் கருவிக்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நீங்கள் உயர் ரக ஸ்மார்ட்போன் வாடிக்கையாளராக இருந்தால் இதை ஒரு முறை முயற்சிக்கலாம்.
இரவில் தூங்கக் செல்லும் போது சார்ஜிங் போடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. இந்தப் புதிய கருவியின் மேல் மொபைலை வைத்தால் மின்காந்த தூண்டல் மூலம் மின்சாரத்தை உருவாக்கி எளிதில் சார்ஜ் ஆகிவிடும். ஆப்பிள் ஐபோன் 10, 8, 8 பிளஸ் மாடல்களுக்கும் சாம்சங் காலக்சி S9, S9 பிளஸ் மாடல்களுக்கும் மற்றும் ஏனைய உயர் ரக மொபைல்களுக்கும் ஏற்றதாக இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி பட்ஜெட் மொபைல்களுக்கு செயல்படாமல் போவது ஒரு துரதிர்ஷ்டமே. எனினும், அடுத்த கட்டமாக, இந்தக் குறையைப் போக்கும் காலமும் கனியும்.
இதனை உபயோகிக்க சில வழிமுறைகளையும் பெல்கின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தக் கருவி செயல்படும்போது மொபைலை நாம் உபயோகப்படுத்தக்கூடாது. மேலும், உலோகப் பொருட்களான சாவி மற்றும் காசுகளை இதனருகில் வைக்கக்கூடாது. ஏனெனில், மின்காந்த அலைகள் மொபைலை பாதிப்புக்கு உள்ளாக்க வாய்ப்புள்ளது.