ads

இந்தியாவில் அறிமுகமான புதிய நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன்

நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஒப்பீடு Imagecredit: Nokia

நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஒப்பீடு Imagecredit: Nokia

நோக்கியா மொபைல்களை HMD க்ளோபல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலே இந்த மொபைல்களை முன்பதிவு செய்யும் வசதி தொடங்கிவிட்டது. நோக்கியா 8 சிராக்கோ மொபைல்,  ஆப்பிளின் ஐபோன் X மற்றும் சாம்சங்கின் காளாக்ஸி  S9 மற்றும் S9+ ஸ்மார்ட்போன்களைப் போலவே OLED தொடுதிரையுடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் அமைந்துள்ளது.

வாடிக்கையாளரின் வசதிக்காக நோக்கியா 8 சிராக்கோ மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் மாடல்களிடேயேயான வித்தியாசங்கள் பின்வருமாறு.

நோக்கியா 8 சிராக்கோ தொடுதிரை: 5.5-inch QHD P-OLEDநோக்கியா 7 ப்ளஸ் தொடுதிரை : 6-inch IPS

நோக்கியா 8 சிராக்கோ பிராஸசர் : குவாள்கம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் நோக்கியா 7 ப்ளஸ் பிராஸசர்: குவாள்கம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

நோக்கியா 8 சிராக்கோ ரேம், உள்சேமிப்பு மற்றும் வெளிசேமிப்புத் திறன் : 6 GB, 128 GB, 256 GBநோக்கியா 7 ப்ளஸ் ரேம், உள்சேமிப்பு மற்றும் வெளிசேமிப்புத் திறன் : 4 GB, 64 GB, 256 GB

நோக்கியா 8 சிராக்கோ முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா :12 MP/13 MP & 5MPநோக்கியா 7 ப்ளஸ் முன்பக்க மற்றும் பின்பக்க கேமரா : 12 MP/12 MP & 16 MP

நோக்கியா 8 சிராக்கோ பேட்டரி திறன் : 3260 mAhநோக்கியா 7 ப்ளஸ் பேட்டரி திறன் : 3800 mAh

அமேசானில் நோக்கியா 7 ப்ளஸ் விலை : Rs. 25,999 (390 USD)அமேசானில் நோக்கியா 8 சிராக்கோவின் விலை : Rs. 49,999 (750 USD) பிளிப்கார்ட்டிலும் இந்த மொபைலை வாங்கலாம். மேலும், இந்த மொபைலை வாங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் போஸ்ட்பாய்ட் வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியே பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமான புதிய நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன்