ads

இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2

இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2

இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2

சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தனது இணையத்தளத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 மாடல் இன்று முதல் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். ரூபாய் 10,000 முதல் ரூபாய் 20,000 வரையுள்ள சாம்சங் மொபைல்களில் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 மாடல் ரூபாய் 13,990 மட்டுமே. முந்தய மாடலின் விலைக்கும் இதற்கும் வெறும் ரூபாய் 90 மட்டுமே வித்யாசம். ரூபாய் 90 விலையில் நமக்கு 8 மெகா பிக்சல் முன்பக்க கேமராவில் இருந்து 13 மெகா பிக்சல் கேமரா கிடைக்கிறது. தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது.

மற்ற நிறுவனங்களின் மொபைல்களை ஒப்பிடும்போது, ஓரிரு ஆயிரங்கள் அதிகம். சமீபத்தில் வெளியான ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடலில் ஸ்னாப்டிராகன் 450, 1.8 ghz பிராஸசர், அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி தன்மை 3300mAh கொண்டுள்ள இதன் விலை வெறும் ரூபாய் 8,999 மட்டுமே. ரெட்மி நோட் 5 மாடலின் திறன், கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 விட ஒருமடங்கு அதிக அம்சங்களுடன் உள்ளது. ரெட்மி நோட் 5 - 4ஜிபி ரேம்,4,000mAh பேட்டரி, 64ஜிபி உள் சேமிப்பு, 2 GHz பிராஸசர் திறன் கொண்ட இதன் விலை ரூபாய் 11,999 மட்டுமே.  கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 மிக கடுமையான போட்டியில் உள்ளது என்றே சொல்லலாம். எனினும், சாம்சங்  கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 மாடல் ரெட்மி மாடல்களை விட குறைவான அம்சங்களே, எக்சினோஸ் 7870, 3 ஜிபி ரேம்,32 ஜிபி உள் சேமிப்பு திறன்,3300 mAh பேட்டரி,ஆக்டோகோர் 1.6 Ghz பிராஸசர்.

இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2
இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2

இன்று முதல் விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2