ads

சாம்சங் கேலக்சி நோட் 9 மாடலில் உள்ள புதிய காலர் வசதிகள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான கேலக்சி நோட் 9 மாடலில் உள்ள காலர் வசதியில் புதிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலான கேலக்சி நோட் 9 மாடலில் உள்ள காலர் வசதியில் புதிய சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்சி நோட் 9 மாடல் ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலில் 512GB இன்டர்னல் (Internal), 8GB ரேம் (RAM) மற்றும்  128GB இன்டர்னல் (Internal), 6GB ரேம் (RAM) போன்ற இரண்டு வகையான மாடல்கள் கிடைக்கின்றன. இதில் 8GB ரேம் கொண்ட சாம்சங் கேலக்சி நோட் 9 மாடலின் விலை 84,900 ரூபாயாகவும், 6GB ரேம் கொண்ட மாடலின் விலை 67,900 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பான சாம்சங் கேலக்சி நோட் 9 மாடல் வாடிக்கையாளர்கள் கவனத்தை பெருமளவு ஈர்த்துள்ளது. இதில் பல புதிய சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள காலர் செட்டிங் (Caller Settings) சிறப்பம்சங்கள், 

1. (Quick Decline Messages) இந்த அம்சம், நமக்கு பயணத்தின் போதோ அல்லது வேறு ஏதேனும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதோ வரும் அழைப்புகளை தவிர்த்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப உதவியாக இருக்கிறது. இதற்கு Caller Settings --> Quick Decline Messages --> Custom Message இல் விருப்பமான மெசேஜ்களை டைப் செய்து கொள்ளவும்.2. (Answering and End Calls) இந்த அம்சம் மூலம் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்களை உபயோகப்படுத்தி அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம். இதற்கு Caller Settings --> Answering and End Calls இல் விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

3. (Call Alerts) இந்த அம்சம் மூலம் கால் வரும் போதோ அல்லது கால் துண்டிக்கப்படும் போதோ வைப்ரேட் ஆகும். இதற்கு  Caller Settings --> Call Alerts இல் விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளவும்.4. (Call Recording) இந்த அம்சம் மூலம் வரும் அனைத்து அழைப்புகளையும் பதிவு (Record) செய்து கொள்ளலாம். இதற்கு Caller Settings --> Record Calls --> Auto Records Calls ஆப்ஷனில் அனைத்து அழைப்புகளையும் அல்லது பதிவு செய்து வைத்துள்ள நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்

சாம்சங் கேலக்சி நோட் 9 மாடலில் உள்ள புதிய காலர் வசதிகள்