ads
சாம்சங் கேலக்ஸி நோட் 9 பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் பற்றிய தகவல்
ராசு (Author) Published Date : Mar 28, 2018 22:56 ISTTechnology News
சாம்சங் கேலக்ஸி நோட் 9 பற்றி இன்று வெளியான இரண்டு முக்கிய தகவல்களில் ஒன்று அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் இடம்பெறும் இடத்தை பற்றியது. சாம்சங் நிறுவனத்தின் உலகமுழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய மாடல்கள் கேலக்ஸி S வகை மற்றும் கேலக்ஸி நோட் வகைகள். கேலக்ஸி S வகையில் இதுவரை S9 வரை வந்துள்ளது. கேலக்ஸி நோட் வகையில் நோட் 8 வரை வந்துள்ளது. சமீபத்தில் இந்த மாதம் மார்ச்சில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S9 மற்றும் S9+ மாடல்களை அறிமுகம் செய்தது, ஒரு சிறு மாற்றங்களுடன் வந்ததால் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி S8 மாடலுடன் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் இல்லை என தெரிவித்தனர், இதன் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலை வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இன்று இணையத்தில் வெளியான செய்தி படி சாம்சங் கேலக்ஸி நோட் 9 அதிக திறன் கொண்டு வெகு நேரம் இயங்கும் வகையில் அதன் பேட்டரி 3850 mAh வரை வடிவமைக்க பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாடலில் பேட்டரி விசியத்தில் மிக பெரிய பிரச்சனையை சந்தித்து விற்ற அணைத்து மாடல்களையும் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடதக்கது. எனவே இந்தமுறை திறனை அதிகப்படுத்தும் போது, மிகுந்த எச்சாரிக்கையுடன் சாம்சங் செயல்படும் என வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.
மற்ற ஒரு அம்சம் கைரேகை சென்சார் பற்றியது, S8, S8+, S9, S9+ Note 8 வகை மாடல்களில் கைரேகை சென்சார் பின்புறம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவோ மொபைல் நிறுவனம் ஏற்கனவே முன் பக்கம் உள்ள தொடுதிரையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சாரை அறிமுக படுத்தி மக்களை பெரிதும் கவர்ந்தது. இந்த விவோ மாடல் மொபைல்கள் அதிக விலை கொண்ட கேலக்ஸி S வகை மற்றும் கேலக்ஸி நோட் வகைகளை விட குறைவானது, அவ்வாறு இருக்கையில் ஏன் சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல் படுத்தவில்லை என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது.
தற்பொழுது அதை நிவர்த்தி செய்யும் வகையில், கேலக்ஸி நோட் 9 மாடலில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கண்டிப்பாக இடம் பெரும் என்பது உறுதியாகி உள்ளது. வந்த இந்த புதிய செய்திகள் சற்று அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.