ads

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 இந்த வாரம் முதல் விற்பனைக்கு

Samsung Galaxy J7 Prime 2 2018 March model. photo credit - All About Tech6

Samsung Galaxy J7 Prime 2 2018 March model. photo credit - All About Tech6

சாம்சங் நிறுவனம் தனது இணையத்தளத்தில் இரணடு நாட்களுக்கு முன் கேலக்ஸி ஜே7 ப்ரைம் (Galaxy J7 Prime 2) என்ற புதியவகை மாடல் ஸ்மார்ட்போனை பதிவேற்றியது. இந்த மாடல் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வெளியான கேலக்ஸி ஜே7 ப்ரைம் மாடலின் ஒரு சிறிய மாற்றத்தின் புதிய வரவாக வந்துள்ளது. இதில் உள்ள ஒரே மாற்றம் முன் பக்கம் இருக்கும் கேமெராவின் அளவு 8 மெகா பிக்சலில் இருந்து 13 மெகா பிக்சலாக உயர்த்தப்பட்டுள்ளது, மற்ற அம்சங்களில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

லீனோவா (Lenovo), ஒப்போ (Oppo) போன்ற இதர மொபைல் நிறுவனங்கள் தங்களது குறைந்த விலை மொபைலில் அதிக அம்சங்களுடன் வெளியிட்டதனால் இந்த கேலக்ஸி ஜே7 ப்ரைம் விலை சற்று அதிகமாக தான் இருந்தது. சில வாடிக்கையாளர்கள் விலை குறைவான மொபைலில் உள்ள அம்சங்களை பார்த்து வாங்கியதால் சாம்சங் நிறுவனத்திற்கு சற்று பின்னடைவு தான். அதிலும் லீனோவா மாடலில் ஒன்றான K8 நோட் எனப்படும் மாடல், கேலக்ஸி ஜே7 பிரைமின் 3300 mAh பேட்டரி அளவை விட 4000 mAh அளவு பெரியதாகவும் அதிக நேரம் இயங்கு வசதியுடனும் உள்ளது.

ஆனால் இதன் விலை ரூபாய் 11,500 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. ஆனால் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் (Galaxy J7 Prime) விலை ரூபாய்  13,900 ஆக இருக்கும் நிலையில் லீனோவா (Lenovo) மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. எனினும் சாம்சங் வாடிக்கையாளர்கள் சிலர், விலை ஒன்றிற்காக வேறு நிறுவனங்களுக்கு செல்வது குறைவு. எனவே சாம்சங் அனைவரையும் கவரும் வகையில் இந்த புதிய மாடலை சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது.

இன்று கோயம்பத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள சாம்சங் கஃபே 'யில் (Samsung Cafe) விசாரித்த போது, புதிய மாடலுக்கான விபரங்கள் ஏற்கனவே வந்துவிட்டது என்றும் , இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் (30-மார்ச்-2018) கடைகளிலும் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் விற்பனைக்கு வரும் என்று உறுதியளித்தனர். 2016 ஆம் ஆண்டு மாடலான கேலக்ஸி ஜே7 ப்ரைம் இன்னும் கையிருப்பு உள்ளதால், அதற்கு விலை குறைய வாய்ப்பு இருக்கலாம் அல்லது இரண்டு மாடல்களுக்கும் வேறு விலை நிர்ணயித்து, கேலக்ஸி ஜே7 ப்ரைம் (Galaxy J7 Prime) கையிருப்பு தீரும் வரை, புதிய வரவின் விலை ரூபாய் 500 முதல் 750 வரை வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரைம் 2 இந்த வாரம் முதல் விற்பனைக்கு