ads

சாம்சங் கேலக்ஸி எஸ்8 எஸ்8 பிளஸ் அதிரடி விலை குறைப்பு

நேற்று அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூபாய் 7,000 வரை விலையை குறைத்துள்ளது. கேலக்ஸி எஸ்8 மாடலின் இன்றைய புதிய விலை ரூபாய் 49,990 மட்டுமே. Photo credit - Samsung India

நேற்று அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூபாய் 7,000 வரை விலையை குறைத்துள்ளது. கேலக்ஸி எஸ்8 மாடலின் இன்றைய புதிய விலை ரூபாய் 49,990 மட்டுமே. Photo credit - Samsung India

சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மார்ச் 2017ஆம் ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ மாடல்களை சொல்லலாம். இதன் வடிவமைப்பு ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றது என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இதன் வரவிற்கு பின் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதன் புதிய வடிவமைப்பை பின்பற்றியது, அதில் ஐபோன் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பின்பற்றியது என்று சொல்லுவதை விட, புதிய வடிவமைப்புக்கு கேலக்ஸி எஸ்8 ஒரு ஆரம்பம் என்று கூறுவது சரியாக இருக்கும். சாம்சங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய போட்டியாளர் என்றால் அது ஐபோன் நிறுவனம் தான், கேலக்ஸி எஸ்8 போல் இருக்காமல் இருக்க அதன் பின் வெளிவந்த ஐபோன் மாடல் X , இன்னும் சிறிதளவு வேறுபட்டுஇருந்தது.

கேலக்ஸி எஸ்8 மாடல் வருவதற்கு முன் வெளியான கேலக்ஸி நோட் 7 மாடல் தோல்வி அடைந்ததால் சாம்சங் நிறுவனம், இழந்த பெயரை மீட்டெடுக்க அறிமுக படுத்திய மாடல் தான் கேலக்ஸி எஸ்8. கேலக்ஸி நோட் 7 மாடல் தோல்வியால், இனி சாம்சங் நிறுவனம் வாடிக்கையாளர்களின் மதிப்பை பெறுவது கடினம் மற்றும் அவர்களால் திரும்ப விற்பனையில் சாதனை படைப்பது கடினம் என்று எண்ணியவர்கள் மத்தியில், கேலக்ஸி எஸ்8 மாடலின் விற்பனை உலகளவில் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து மட்டுமில்லாமல் விற்பனையிலும் உலகளவில் மிக பெரிய பெரிய சாதனை படைத்தது, இன்றளவும் நல்ல விற்பனையில் தான் உள்ளது.

இந்தியாவில் இந்த மாடலின் ஆரம்ப விலை ரூபாய் 70,000 இருந்தது, பின் சலுகைகளுடன் ரூபாய் 59,000 வரை இருந்தது, இந்நிலையில் இந்த வருடம் வெளியான புதிய வரவு கேலக்ஸி எஸ்9 மாடல் பெரிய அளவில் விற்பனையாளர்களை திருப்தி படுத்தவில்லை என்றதால், நேற்று அதிரடியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூபாய் 7,000 வரை விலையை குறைத்துள்ளது சாம்சங் நிறுவனம். கேலக்ஸி எஸ்8 மாடலின் இன்றைய புதிய விலை ரூபாய் 49,990 மட்டுமே. இந்த முடிவு, புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கும், கேலக்ஸி எஸ்7 வைத்திருப்பவர்களுக்கும் அப்டேட் செய்துகொள்ள நல்ல சந்தர்ப்பம்.

கேலக்ஸி எஸ்8 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் வந்த மாடலாக இருந்தாலும், இன்றும் இதன் திறன் மிக வேகமாக செயல் படக்கூடிய அளவில் உள்ளதால், விற்பனை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று சாம்சங் விற்பனை மையங்கள் தெரிவித்திருக்கிறது.

கேலக்ஸி எஸ்8 முக்கிய அம்சங்கள்- மார்ச் 2017 வெளியானது  - 4G LTE- S8 - 5.8-இன்ச் தொடு திரை (5.8inches AMOLED Display)- S8+ - 6.2-இன்ச் தொடு திரை (6.2inches AMOLED Display)- ஆண்ட்ராய்டு 7.1.1 (Nougat 7.0)- ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் (அமெரிக்கா மற்றும் சீனா)- எக்சினோஸ் 8895 (Exynos 8895) (இந்தியா)- ஆக்டோகோர் 2.3 & 1.7 Ghz பிராஸசர் (Octa-core 2.3 & 1.7 GHz Cortex-A53)- S8 - 4 ஜிபி ராம் வேகம் (4 GB RAM)- S8+ 6 ஜிபி ராம் வேகம் (6 GB RAM)- S8 - 64 ஜிபி உள் சேமிப்பு திறன் (64 GB Internal Memory)- S8+ 128 ஜிபி உள் சேமிப்பு திறன் (128 GB Internal Memory)- 256 ஜிபி வரை எஸ்டி கார்ட் வசதி (256 GB expandable microSD)- 12 மெகா பிக்சல் கேமரா (பின்பக்கம்) (12MP Primary camera)- 8 மெகா பிக்சல் கேமரா (முன் பக்கம்) (8 MP front camera)- வைபை, ப்ளூடூத் 5.0, டைப் சி சார்ஜ்ர் (Wifi, Bluetooth 5v, Type C reversible connector)- யுஎஸ்பி விரலி (USB OTG Pen-drive)- கைரேகை பாதுகாப்பு சென்சார் (Fingerprint security sensor)- கருவிழி பாதுகாப்பு சென்சார் (Iris scanner)- S8 - 3000 mAh பேட்டரி (Li-Ion 3000 mAh battery)- S8+ 3500 mAh பேட்டரி (Li-Ion 3500 mAh battery)

S8 - 5.8-இன்ச் தொடு திரைS8 - 5.8-இன்ச் தொடு திரை
S8 plus - 6.2-இன்ச் தொடு திரைS8 plus - 6.2-இன்ச் தொடு திரை

சாம்சங் கேலக்ஸி எஸ்8 எஸ்8 பிளஸ் அதிரடி விலை குறைப்பு