ads

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு. photo credit Samsung India

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு. photo credit Samsung India

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் கேலக்ஸி எஸ் 9 மொபைலை அறிமுகம் செய்தது. இதன் பிறகு, அடுத்த நாள் மார்ச் 7ஆம் தேதி ஷோரூம் நிறுவனர்களிடம் கேலக்ஸி எஸ் 9 பற்றிய முக்கியமான தகவுள்கள் மற்றும் விற்பனை நுணுக்கத்தையும் எடுத்துரைத்தது.

சாம்சங் நிறுவனத்தில் மாநிலங்களவில் உள்ள அனைத்து விற்பனையாளர்களின் சந்திப்பில் கேலக்ஸி எஸ்9 ஸ்டாக் நிலவரங்கள், உடனடியாக கிடைக்கும் கலர் மற்றும் 64GB/256GB மாடல்கள், கேலக்ஸி எஸ்9 LED  கவர், ஹைப்பர் கினிட் கவர், சிலிகான் கவர், டெஸ் பாட், வயர்லெஸ் சார்ஜ்ர் போன்றவற்றின் ஸ்டாக் நிலையை பகிர்ந்துகொண்டனர்.

இந்த கேலக்சி எஸ்9 மொபைல் முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரும் மார்ச் 16ஆம் தேதி விநியோகம் செய்ய உள்ளது.  இந்த புதிய கேலக்ஸி எஸ் 9 மாடல் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பிற்குரிய மொபைலாக இருந்தாலும் பெரிய மாற்றங்கள் ஒன்று செய்ய படவில்லை.

கேமரா, அனிமேட்டட் சொந்த உருவ எமோஜி மற்றும் கைரேகை இடத்தை மாற்றி அமைத்து உள்ளது. பெரிய அளவில் மாற்றங்கள் இல்லையென்றாலும் 64GB சேமிப்பு கொண்ட மாடலின் விலை இதற்குமுன் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 விட குறைவு. 64GB - 256GB உள்ள மாடல்களின் விலை வித்தியாசம் வெறும் 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 விலை மற்றும் சலுகைகள்

 Galaxy S9 (4GB RAM)Galaxy S9+ (6GB RAM)
 64 GB Rs. 57900 Rs. 64900
 256 GB Rs. 65900 Rs. 72900
   
Paytm Mall Offer Rs. 6000 Cashback Rs. 6000 Cashback
HDFC Credit Card Rs. 6000 Cashback Rs. 6000 Cashback
Samsung Exchange Offer Rs. 6000 Cashback Rs. 6000 Cashback
Airtel 2TB data 24 monthsRs. 9900 initial payment Rs. 2499 per month Rs. 2499 per month
Jio 1TB data 12 monthsRs. 4999 Initial payment - -
Vodofone 12 months Free Netflix subscription Free Netflix subscription
 

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 விரைவில் விற்பனைக்கு