ads
தொழில்நுட்ப உலகில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வருகைக்காக காத்திருக்கும் மக்கள்
வேலுசாமி (Author) Published Date : May 14, 2018 10:54 ISTTechnology News
ஸ்மார்ட்போன்களின் புது புது அம்சங்களை கொண்ட மாடல் ஸ்மார்ட்போன்கள் தற்போதைய மக்களிடம் வெகுவாக கவரப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப சந்தைகளில் தங்களது வாடிக்கையாளர்களின் கவனங்களை அதிகரிக்க சாம்சங், ரெட் மி, ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் புது அப்டேட்களை கொண்ட புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சாம்சங் மற்றும் லினோவா போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் காப்புரிமையை பெற்றுள்ளது. இந்த வகை ஸ்மார்ட்போன்கள் இரண்டு திரைகளை கொண்டுள்ளது. ஒரு திரையில் வழக்கமான ஆண்டிராய்டு போலவும், மற்றொரு திரையை இணைக்கும் போது டேப்லெட் போன்ற அனுபவமும் பயனாளர்களுக்கு இருக்கும். இந்த வகை ஸ்மார்ட்போனில் மடிக்கும் போது திரைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு கவர் அளிக்கப்படுகிறது.
இது தவிர இந்த வகை ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய (Wireless Charger) அம்சமும் வழங்கப்பட உள்ளனர். இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புகள் குறித்த தகவல் சாம்சங், மைக்ரோசாப்ட் மற்றும் லினோவா நிறுவனங்கள் இணைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வகை ஸ்மார்போனின் வருகைக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மைக்ரோசாப்ட் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.