ads
சாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு
ராசு (Author) Published Date : Jun 29, 2018 12:22 ISTTechnology News
சாம்சங் நிறுவனம் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 மாடலை வரும் ஆகஸ்ட் மதம் 9ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அமெரிக்க இணையதள பக்கத்தில் "Galaxy UNPACKed 2018" என்று அறிவித்து , லைவ் வீடியோ மற்றும் முக்கிய செய்திகளுக்காக முன்பதிவையும் ஆரம்பித்துள்ளது.
இது வரை வெளியான தகவல்களின் படி, இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 குறைந்தது 128 GB சேமிப்பு திறனுடன் 6GB RAM வசதியுடன் வரும் என்றும், கொரிய மற்றும் அமெரிக்காவில் 256 GB சேமிப்பு திறனுடன் 8GB RAM வசதி மற்றும் 512GB சேமிப்பு திறனுடன் 8GB RAM வசதியுடன் கூடிய மாடல்கள் வரவுள்ளது. ஐபோன் X, ViVO NEX மற்றும் OPPO FIND X மாடலைகளை போன்று கேலக்ஸி நோட் 9 வடிவமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
2017 ஆம் ஆண்டு வெளியான எஸ் 8 மாடலுக்கும் சமீபத்தில் வெளியான கேலக்ஸி எஸ் 9 மாடலுக்கும் எந்த ஒரு வடிவமைப்பு வித்தியாசம் இல்லை , அதற்கு பதிலாக எஸ் 9 மாடலில் கேமெராவிற்கு முக்கியத்துவம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அதே போல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதற்கான எந்த ஒரு தகவுள்களும் இல்லை, இதன் முந்தய மாடலான கேலக்ஸி நோட் 8 போன்ற வடிவமைப்புடன் ஸ்டைலஸ் பேனா "STYLUS PEN" புதிய தொழில்நுட்பங்கள் இருப்பதற்க்கான அதிக வாய்ப்பு உள்ளது.
Change is coming August 9th 2018. Can you keep up? #Unpacked pic.twitter.com/ToJkS28eXc
— Samsung Mobile (@SamsungMobile) 27 June 2018