ads

இறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி

வடகரோலினா பல்கலை கழக ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் உதவியுடன் கடவுளின் முகத்தை வடிவமைத்துள்ளனர்.

வடகரோலினா பல்கலை கழக ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் உதவியுடன் கடவுளின் முகத்தை வடிவமைத்துள்ளனர்.

உலகில் பில்லியன் கணக்கில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இறைவன் என்பவர் யார்? அவர் எப்படி இருப்பார்? என்ற பல கேள்விகள் இருந்து வருகிறது. ஆனாலும் நமது முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி இறைவன் என்பவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற நம்பிக்கையில் நமது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்ட உருவமைப்பை கடவுளாக வைத்து அன்றாடம் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து வருகிறோம். இது தவிர கடவுளும் இல்லை, பேயும் வில்லை என்று மூட நம்பிக்கைகளில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வரும் மக்களும் இந்த உலகில் உண்டு.

இப்படி பல விதமான மக்களுக்கு மத்தியில் இறைவன் குறித்த பல கேள்விகள் கேள்விகளாகவே உள்ளது. இதனை தீர்க்க நீண்ட வருடங்களாக ஆராய்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடவுளுக்கு மனித உருவம் கொடுக்கும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர். வேதங்கள், புராணங்கள் இவற்றிலும் மனிதன் என்பவன் கடவுளின் பிரதிபலிப்பு என்றும் இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு கடவுளாக இருந்து அவர்களை காப்பாற்றுவது மனிதனுடைய கடமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஞ்ஞானிகள், லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை வைத்து கடவுளின் முகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த உருவத்தை வடகரோலினா பல்கலை கழக ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவர்கள் உதவியுடன் உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வோரிடமும் தனித்தனியே ஓவியத்தை திரட்டி ஒன்றிணைப்பதன் மூலம் கடவுளுக்கு  உருவத்தை அளிக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப ஆய்வின் முடிவும் மிக சுவாரஸ்யமாக ஒரு உருவம் கிடைத்துள்ளது. இந்த உருவத்தை தற்போது சமூக தளங்களில் ஆய்வு குழு வெளியிட்டுள்ளது.

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கடவுளின் உருவம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கடவுளின் உருவம்

இறைவனுக்கு உருவமளித்துள்ள விஞ்ஞானிகளின் புதிய முயற்சி