வியக்காதீர்கள் இது சாம்சங் கேலக்ஸி நோட் 9 லீக் கிடையாது

       பதிவு : Apr 05, 2018 17:17 IST    
கேலக்ஸி நோட் 9 லீக் photo credit - samarena கேலக்ஸி நோட் 9 லீக் photo credit - samarena

சாம்சங் மொபைலில் அடுத்து வரவிருக்கும் விலையுயர்ந்த மொபைல் மாடல் "கேலக்ஸி நோட் 9 (Galaxy Note 9)" ஆகும். இதன் வரவை மிகுந்த ஆவலுடன் வாடிக்கையாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அவர்களை ஊக்கிவைக்கும் வகையில் ஏதாவது ஒரு புதிய செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே தான் உள்ளது. அதில சில செய்திகள் இறுதியில் வதந்தியாக இருக்கும். சில சமயம் இதுபோன்ற பொய்யான செய்திகள் வாடிக்கையாளர்களை எரிச்சலடைய செய்வதும் உண்டு.

இந்நிலையில் தினமும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 பற்றி ஏதாவது புதிய செய்திகள் வந்துள்ளதா? என்று பலரும் பார்ப்பதால், ஏராளமானோர் அவர்களது கற்பனை திறமையினால் புதிய புகைப்படம் ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இது 'கேலக்ஸி S9' அருகில் இருப்பது 'கேலக்ஸி நோட் 9' என இணையதளத்தில் வெளியிட அனைவரும் அதை உண்மை என நினைத்து ஷேர் செய்ய தொடங்கி விட்டனர். இது முற்றிலும் பொய்யான தகவல். சில செய்தி நிறுவனங்கள் அவர்கள் வெளியிடும் செய்தியை தாங்கள் தான் முதலில் வெளியிட்டுள்ளோம் என தெரிவிப்பதற்கு, அவர்களின் கம்பெனி பெயரை புகைப்படத்தின் மேல் இணைத்துக்கொள்வார்கள். சில சமயம் இதை பார்க்கும் மக்கள், உண்மை என நம்புவதும் உண்டு.

அதை போல தான் இன்று 'கேலக்ஸி நோட் 9' பற்றி வெளியிட்ட நபர்கள் பழைய 'கேலக்ஸி S9' மற்றும் 'கேலக்ஸி S9+' மொபைலின் புகைப்படத்தினை கொஞ்சம் மாற்றங்கள் செய்து, அவர்களது கம்பெனியின் பெயரை இணைத்து உண்மை செய்தியை போல் வெளியிட்டு உள்ளார்கள்.

 

நாங்கள் இணைத்துள்ள புகைப்படத்தில், 'கேலக்ஸி நோட் 9' என்று குறிப்பிட்டு அதன் கைரேகை சென்சாரை இல்லாமல் கேமெராவை மட்டுமே காண்பித்து உள்ளார்கள். ஏற்கனவே பலமுறை 'கேலக்ஸி S9' மாடல் புகைப்படங்களை பார்த்த வாடிக்கையாளர்கள் மிக எளிதில் இது 'கேலக்ஸி நோட் 9' இல்லை என்பதை உண்மையான புகைப்படத்துடன் ஒப்பிட்டு காண்பித்துள்ளனர்.

மாற்றங்கள் செய்த புதிய புகைப்படம் முன்பக்கம். photo credit Samarenaமாற்றங்கள் செய்த புதிய புகைப்படம் முன்பக்கம். photo credit Samarena
மாற்றங்கள் செய்த புதிய புகைப்படம் பின் பக்கம் மற்றும் நோட் 9 ஸ்டிக்கர். photo credit Samarenaமாற்றங்கள் செய்த புதிய புகைப்படம் பின் பக்கம் மற்றும் நோட் 9 ஸ்டிக்கர். photo credit Samarena
கேலக்ஸி S9 பழைய புகைப்படம். photo credit Sammobileகேலக்ஸி S9 பழைய புகைப்படம். photo credit Sammobile
போலியான கேலக்ஸி நோட் 9 ஸ்டைலஸ் பென். photo credit Sammobileபோலியான கேலக்ஸி நோட் 9 ஸ்டைலஸ் பென். photo credit Sammobile

வியக்காதீர்கள் இது சாம்சங் கேலக்ஸி நோட் 9 லீக் கிடையாது


செய்தியாளர் பற்றி

தங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க

rasu editor and writer

ராசுசெய்தியாளர்