ads
ட்ரு காலர் செயலியில் புதியதாக வழங்கப்பட்ட கால் ரெக்கார்டிங் அம்சம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 19, 2018 16:05 ISTTechnology News
உலகம் முழுவதும் பல பில்லியன் மக்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் ட்ரு காலர் (True Caller) செயலியானது தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த செயலியானது கடந்த 2009முதல் 8 வருடங்களாக உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. தங்களுடைய மொபைலுக்கு வரும் தகாத அழைப்புகளை தவிர்க்கும் இந்த செயலியின் சிறப்பம்சம் ஏராளமான மக்களை கவர்ந்து வருகிறது.
தங்களது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்த செயலியில் சிறப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அழைப்புகளை ரெகார்ட் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் மொபைலுக்கு அழைப்புகள் வரும் போது தங்களது மொபைலில் பதிவு செய்யாத எண்ணின் பெயரையும் காட்டுகிறது. இந்த அம்சம் இன்டர்நெட் இல்லாமலும் செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பம்சம் மிகவும் பாதுகாப்பானது என்று ட்ரு காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ரெகார்ட் அம்சம் வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் எந்த அழைப்புகளையும் பதிவு செய்யாது. இந்த அம்சமானது தற்போது ஆண்டிராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்கு தலத்தில் உபயோகப்படுத்தும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் மற்றும் மோட்டோ போன்ற சில ஸ்மார்ட்போன்களிலும் இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.