ads

டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்

உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்களை டெல்லி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தாரா சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்களை டெல்லி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

ரோபோட்டுக்களின் ஆதிக்கம் உலகில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தேவைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்படும் இந்த ரோபோட்டுக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், ரயில், விமானம் உள்ளிட்ட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. விமானத்துறையில் பயணிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் வகையில் உலகின் பல்வேறு வகையில் இந்த வகை ரோபோட்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த வகை ரோபோட்களை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்த ரோபோட்கள் மூலம் பயணிகளின் பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய ஆவணங்களை தனித்தனியாக சோதனை செய்து அனுமதித்த பின்னரே பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய முடியும். சோதனைக்கு பிறகு பயணிகளுக்கு புறப்படும் நுழைவாயில், வானிலை அறிக்கை, சேரும் இடம் போன்ற தகவல்களை அளிக்கும். இந்த வகை ரோபோட்டை இந்தியாவின் விமான நிறுவனங்களுள் ஒன்றான விஸ்தாரா அறிமுகம் செய்ய உள்ளது. சோதனைக்காக மட்டுமல்லாமல் கைககளை மட்டும் அசைக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை ரோபோட்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தினுள் மட்டும் செயல்பட உள்ள இந்த ரோபோட்கள் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்லும், இந்த ரோபோட்டில் நவீன கேமிராக்கள், 360டிகிரி கோணமும் சுழலக்கூடிய திறன் மற்றும் நான்கு சக்கரங்களையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்கள் உடைய ரோபோட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி டெல்லி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்த உள்ளனர். ராடா (RADA) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ரோபோட்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்றால் மேலும் சிறப்பம்சங்களை கொண்டதாக உருவாக்கப்படும்  என்று விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ரோபோட்கள் அறிமுகம்