ads
வாட்சப் வதந்திகளால் நேரும் உயிரிழப்புகளை தடுக்க வாட்சப் புதிய திட்டம்
புருசோத்தமன் (Author) Published Date : Jul 20, 2018 14:31 ISTTechnology News
உலகம் முழுவதும் பல பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் சமூக வலைத்தள செயலியான வாட்சப்பில் தற்போது வதந்திகள் பெருகி வருகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை கடத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகின்றன. இதனால் தற்போதுள்ள மக்கள் வெளியில் செல்லும் போது தென்படும் ஒவ்வொரு மனிதரையும் திருடனாகவோ, கொள்ளைக்காரனாகவோ தான் பார்க்கின்றனர்.
சமூக வலைத்தளமான வாட்சப், பேஸ்புக் போன்ற செயலிகளில் இவன் திருடன், இவன் கொலைகாரன், இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள், முடிந்தளவு அதிகம் பகிருங்கள் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நம்பி மக்களும் கொலைகாரன், திருடன் என்று பழி சுமத்தப்பட்ட அப்பாவி மனிதர்களை அடித்து கொன்று விடுகின்றனர். இது போன்ற வதந்திகள் அதிகரித்து கொண்டே வருவதால் இதனை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்சப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தங்களுக்கு வாட்சப்பில் வரும் மெசேஜ் உண்மைதானா என்று அறியாமலே அதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வர்ட் செய்து விடுகின்றனர். இது போன்று வதந்திகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற நாடுகளை விட 250 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்தி வரும் இந்தியாவில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வாட்சப் நிறுவனம் தற்போது புதிய முயற்சியினை மேற்கொண்டுள்ளது. ஒரு மெசேஜை இனி 5 பேருக்கு மட்டுமே பார்வர்ட் செய்ய முடியும்.
இதன் மூலம் இந்த மெசேஜ் பார்வர்ட் மெசேஜ் என்பதை காட்டும் விதமாக ஒரு மேற்கோள் குறிப்பும் காட்டும். 5 பேருக்கு ஒரு மெசேஜ் பார்வர்ட் செய்த வுடன் பார்வர்ட் செய்யும் அம்சம் செயலிழந்து விடும். இந்த அம்சம் மூலம் அதிகப்படியாக பரவி வரும் வதந்திகளை கட்டுப்படுத்த உள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட்டை விரைவில் செயல்படுத்த உள்ளனர்.