ads
துபாய் சுற்றுலா பற்றிய சில முக்கிய குறிப்புகள் - சுற்றுலா 1
ராசு (Author) Published Date : Dec 19, 2017 16:23 ISTTours and Travels
அரபு நாடுகளில் ஒன்றானது துபாய். மற்ற அரபு நாடுகளை போல் கடுமையான சட்ட திட்டங்கள் இல்லை என்றாலும் மிக பாதுகாப்பான நாடு துபாய். நம்மில் பெரும்பாலானோருக்கு துபாய் என்றால் சில நினைவுகள் வருவது உண்டு , அவைகளில் சில "வேலைக்குபோய் கை நிறைய சம்பாதிப்பது" , "நடிகர் பார்த்திபன் வடிவேல் நகைச்சுவைகள் ", " துபாயில் வேலைக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்திகள்", "மிக உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகரங்கள்", "சிறந்த கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) மற்றும் பால்ம் ஐஸ்லேந்து (Palm Island) " போன்ற சில நினைவுகள் வரும். சிலர் அரபு நாட்டு சட்டதிட்டங்களையும், பணமோசடி போன்ற செய்திகளையும் கேட்டறிந்து சுற்றுலாவிற்கும் செல்லாமல் இருப்பார்கள். உண்மைதான் அரபு நாடுகளில் பின்பற்றும் சட்டங்கள் கடுமையானதுதான் ஆனால் துபாயில் மிக கடுமையான சட்டங்கள் இல்லை, நாம் அவர்களின் விதிமுறைகளை மிக எளிமையாக பின்பற்ற முடியும். உங்களுக்கு எளிய முறையில் துபாய்க்கு சுலபமாக சுற்றுலா சென்று பாதுகாப்பான முறையில் வருவது எப்படி என்பதை விளக்குகிறோம். அதற்குமுன் துபாயை பற்றிய சில முக்கிய குறிப்புகள்,
துபாய் மிக அழகான நாடு, சிங்கப்பூரை போல் வர்த்தகம் அதிகம் நடக்கும் நாடு. இங்கு வெளிநாட்டினர் பலர் வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் டேக்ஸி ஓட்டுகிறார்கள், கட்டுமான துறையிலும் அதை சார்ந்த வயரிங் (Wiring) வேலை, பெயின்டிங் (Painting) வேலை, பிளம்பர் (Plumber) வேலை போன்ற துறைகளிலும், ஏற்றுமதி - இறக்குமதி துறையிலும் , உணவு விடுதிகள் போன்றவற்றில் வேலை பார்த்து வருகின்றனர். சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இங்கு வசிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களும் துபாய் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். கடந்த 7 வருடங்களில் துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக துறையில் அதிக வளர்ச்சியடைந்து வருகிறது. மூன்று நிமிடத்திற்கு ஒரு விமானம் தரை இறங்குவதும், துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமான சேவை வழங்கும் அளவிற்கு துபாய் விமான நிலையம் அதிக வளர்ச்சி அடைந்து உள்ளது. துபாயில் 2017 ஆண்டு வரை வரி கிடையாது, நீங்கள் வேறு எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும் அதற்கு வரி கிடையாது.
இதனால் துபாயில் ஓடும் வாகனங்கள் குறைந்த விலையுடையது. உதாரணத்திற்கு இந்தியாவில் வாங்கும் 40 லட்சத்தில் உள்ள வாகனம், அங்கு 20 லட்சத்தில் கூட கிடைக்கும். 2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல் 5% வரி அனைத்து பொருட்களுக்கும் சேரும். பொதுவாகவே துபாயில் பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும். துபாயில் மின்னணு பொருட்கள் பெரும்பாலும் மிக குறைந்த விலையில் கிடைக்கும், ஆனால் இங்கு இந்தியாவிற்குள் எடுத்துவர இந்திய அரசாங்கத்திற்கு சுங்க வரி கட்ட வேண்டும். சில பொருள்களுக்கு சுங்க வரி அவசியம் இல்லை ஆனால் 32இன்ச் (32Inch) மேல் உள்ள தொலைக்காட்சி பெட்டி (tv ) போன்ற பொருட்கள், மிக பெரிய அல்லது விலை உயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்தால் கண்டிப்பாக குறைந்தது 36% வரை வரி கட்ட வேண்டும். சில பொருட்களுக்கு வரி கட்ட தேவையில்லை.
குறிப்பு: அலைப்பேசி (cell phone), மடி கணினி (Laptop), தங்கம் (Gold) போன்ற பொருட்கள் உபயோகபடுத்தாமல் புதியது போன்று இருந்தால், சில சமயம் வரி கட்டுவது அவசியம். முடிந்தவரை புதிய பொருட்களின் அட்டை பொட்டியை அகற்றிவிட்டு எடுத்து வந்தால் நல்லது. ஏனென்னில் பொதுவாக உபயோக படுத்திய பொருட்களுக்கு வரி விதிக்கமாட்டார்கள், விலைஉயர்ந்த பொருட்களுக்கு இது பொருந்தாது.
துபாயில் போக்குவரத்து மிக அழகான முறையிலும் , அதி நவீன முறையிலும் பயன்படுத்தபடுகின்றன. அனைத்து இடங்களுக்கும் சென்று வர தானியங்கி ரயில் உள்ளது, நேர்மையான கட்டணத்தில் பயணிக்க டேக்சி உள்ளது. டேக்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் சாலை போக்குவரத்துக்கு விதிகளின் படியே செல்லும், உதாரணத்திற்கு - டாக்ஸிக்குள் நாம் உணவு உண்பது தடை செய்ய பட்டுஇருக்கிறது. இதே போல் மக்களுக்கு பாதுகாப்பான நிறைய போக்குவரத்துக்கு விதிமுறைகளை அங்கு அனைவரும் பின்பற்றும்படி செயல்பாட்டில் உள்ளது.
துபாயில் விலை உயர்ந்த பொருட்கள் என்றால் தங்கும் விடுதி, சுற்றுலா தளங்களின் அனுமதி கட்டணம். நம் ஊரில் இல்லாத துபாயின் சிறப்பு மிக்க உணவு விடுதிகளின் பாரம்பரிய உணவுகள், உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் ப்ருட்ஜ் கலீஃபா (Burj Khalifa) டவரின்மேல் ஏறி துபாய் நகரத்தை பார்க்கும் கட்டணம் மிக அதிகம்.