அதிகரித்து வரும் கடல் மாசுபாடு - ஆஸ்திரேலியாவில் 135 திமிங்கலங்கள் உயிரிழப்பு

       பதிவு : Mar 24, 2018 16:50 IST    
ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை 150 திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. இதில் 135 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. Photo Credit - AFP ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை 150 திமிங்கலங்கள் கரை ஒதுக்கியுள்ளது. இதில் 135 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. Photo Credit - AFP

பூமியில் நிலப்பரப்பை 70 சதவீதம் கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடலில் பல்வேறு ஆராச்சிகளை பல்வேறு அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது வரை பல்லாயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மனிதர்கள் நெருங்கமுடியாத ஆழமான பகுதிகளில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல வகையான உயிரினங்கள் உள்ளது. கடலை மனிதர்கள் போக்குவரத்திற்காகவும், மீன் பிடித்தல் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

கடலில் தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள், சாக்கடை நீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற கடல் அழகை சிதைக்க கூடிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் போக்குவரத்துக்காக உபயோகப்படுத்தும் கப்பல்களில் வெளியிடும் கழிவு நீர் போன்றவையும் கடல் நீரில் கலந்து மாசுபடுத்தி வருகின்றது. இதனால் கடல் நீர் மாசடைவது மட்டுமல்லாமல் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

கடல் நீர் மாசடைந்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் கடல் வாழ் உயிரினங்களின் இறப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடல் நீர் மாசடைவதால் பாதரசம் போன்ற ஆபத்தை விளைவிக்கக்கூடிய வேதிப்பொருட்களும் கலக்கின்றது. இத்தகைய வேதிப்பொருட்கள் கடலில் வாழும் மீன்கள், திமிங்கலங்கள் போன்ற உயிரினங்களிலும் கலந்து விடுகிறது. இதனை உட்கொள்ளும் மனிதர்களும் இறுதியாக இறக்கும் அபாயம் ஏற்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை 150 பைலட் திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதில் 15 திமிங்கலங்கள் மற்றும் காப்பாற்றப்பட்டு மீதமுள்ள 135 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேற்கு ஆஸ்திரிலேயாவின் தலைநகரான பெர்த் என்ற பகுதியில் இருந்து 315 கிமீ தொலைவில் உள்ள ஹாமெலின் கடற்கரையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை கண்ட மீனவர் ஒருவர், வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனவிலங்கு அதிகாரிகள், பூங்கா அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயிருக்கு போராடிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விட தீவிர முயற்சிகளை செய்தனர். ஆனால் கடல் கொந்தளிப்பும், மிகுதியான பாறைகளும் சூழ்நிலைக்கு எதிராக அமைந்துள்ளது. இதனால் 15 திமிங்கலங்கள் மட்டும் கடலுக்குள் விடப்பட்டது. எஞ்சிய திமிங்கலங்கள் அனைத்தும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். பொதுவாக திமிங்கலங்கள், பயந்த நிலையிலும், கடல் சூழ்நிலை ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், வேதனையில் இருக்கும் போதும் கரை ஒதுங்கும். ஆனால் இந்த 150 திமிங்கலங்களும் கரை ஒதுங்கியதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. பெரும்பாலும் அதிகரித்து வரும் கடல் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

 


அதிகரித்து வரும் கடல் மாசுபாடு - ஆஸ்திரேலியாவில் 135 திமிங்கலங்கள் உயிரிழப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்