ads

மியான்மரில் மாணிக்க சுரங்கத்தில் மண்ணோடு மண்ணாக புதைந்த 27 தொழிலாளர்கள்

மியான்மர் நாட்டில் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மியான்மர் நாட்டில் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இறையாண்மை மிகுந்த நாடான மியானமர் (பர்மா),  இன்றைய இரும்புத்திரை நாடாகும். 60 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ள இந்த நாட்டில் சுரங்கங்கள் அதிகப்படியாக உள்ளது. இந்நாட்டில் உள்ள அதிகப்படியான மக்களுக்கு சுரங்கங்கள் மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.

முக்கியமாக இந்நாட்டில் வட பகுதியில் காசின் மாகாணத்தில் மட்டும் அதிகப்படியான சுரங்கங்கள் உள்ளது. காசின் மாகாணத்தில் உள்ள 70 ஆயிரம் கிருஸ்துவ மக்கள் இந்த சுரங்கங்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் காசின் பகுதியில் செட் மூ என்ற இடத்தில் உள்ள மாணிக்க கல் சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி தொழிலாளர்கள் சுரங்கத்தில் கற்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 27 தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில் புதைந்த 27 தொழிலாளர்களும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தவிர தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை சிரமப்படுத்தி வருகிறது. 

மியான்மரில் மாணிக்க சுரங்கத்தில் மண்ணோடு மண்ணாக புதைந்த 27 தொழிலாளர்கள்