ads

30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா

70 வயதை கடந்த இவர் 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.

70 வயதை கடந்த இவர் 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்.

மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று தூக்கம். நாள் முழுவதும் உழைத்து, சக்தியை இழந்த உடம்பிற்கு தூக்கம் புத்துணர்ச்சி அளிக்கிறது. இந்த தூக்கம் உடலை சுறுப்பாக இயங்க வைத்து, மூளைக்கு தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த தூக்கம் ஏராளமான மக்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. மனதில் இருக்கும் மனக்கவலை, வேலைப்பளு, துக்கம் போன்றவற்றினால் ஏராளமான மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர்.

குறிப்பாக காவல்துறை, ராணுவம், மருத்துவம் போன்ற பொது துறைகளில் வேலை பார்ப்போரின் புலம்பல் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகமாகி கொண்டே செல்கிறது. இது தவிர ஒரு நாளைக்கு குடும்பத்தை பராமரிக்க 1000 ரூபாயாவது சம்பாரிக்க வேண்டும் என்ற நோக்கில் லட்சக்கணக்கான சாமானிய மனிதர்கள் இரவு முழுவதும் தூக்கமின்மையால் வேலை பார்த்து வருகின்றனர். இப்படி பல்வேறு காரணங்களால் பலதரப்பட்ட மக்களுக்கு தூக்கம் சரிவர கிடைப்பதில்லை.

இவர்களும் கூட எப்படியாவது இரண்டு அல்லது மூன்று மணிநேரமாவது தூங்கிவிடுகின்றனர். ஆனால் இங்கு ஒருவர் கடந்த 30 வருடங்களாக ஒரு நொடி கூட தூங்காமல் வாழ்ந்து வருகிறார். 70 வயதை கடந்த இந்த முதியவர் சவூதி அரேபியாவை சேர்ந்தவர். இவர் ராணுவத்தில் பணிபுரிந்த போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் வேலை பார்த்துள்ளார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவருடைய தூக்கமின்மைக்கு காரணம் என்னவென்று அறிய மருத்துவர்களும் இவரை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர்.

இவருக்கு நான்கு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகும் இவருடைய தூக்கம் இவருக்கு கிடைத்த பாடில்லை. இவருடைய தூக்கமின்மைக்கு அவரின் மன அழுத்தமே காரணம் என்று மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். இவருடைய 30 வருட தூக்கமின்மையை அறிந்த அல் பஹா பகுதியை சேர்ந்த அதிகாரி ஒருவர் இவருக்கு காரை பரிசளித்துள்ளார். இது தவிர இவருடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

30 வருசமா தூங்காமலே உயிர்வாழும் மனுஷனை பார்த்திருக்கிறீர்களா