ads

வீடியோ கேம் தகராறில் தனது சகோதரியை கொன்ற 9வயது சிறுவன்

அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளிடையே நடந்த வீடியோ தகராறில் 13 வயது சகோதரியை 9 வயது சிறுவன் சுட்டதால் சகோதரி உயிரிழப்பு. Dijonae White. photo credit @dewhite Facebook

அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளிடையே நடந்த வீடியோ தகராறில் 13 வயது சகோதரியை 9 வயது சிறுவன் சுட்டதால் சகோதரி உயிரிழப்பு. Dijonae White. photo credit @dewhite Facebook

உலகம் முழுவதும் வீடியோ கேமிற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாக உள்ளனர். இதில் முக்கியமாக சிறுவர்கள் அதிகமாக சிறு வயதிலிருந்தே பாதிப்படைகின்றனர். இந்த வீடியோ கேமிற்கு அடிமையாகி இரவு முழுவதும் தூங்காமல், சாப்பிடாமல் கூட விளையாடுகின்றனர். இதனால் அவர்களுக்கு சரியான தூக்கமின்மை, படிப்பறிவின்மை, கண் எரிச்சல் போன்ற குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர். இது பெற்றோரின் கட்டுப்பாடின்மையே இதற்கு காரணமாக அமைகிறது.

தற்போதுள்ள சூழலில் குழந்தைகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் வீடியோ கேம் போன்றவையை சிறு வயதிலிருந்தே உபயோகப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகள் வெளியில் பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் சகஜமாக பழகியும், விளையாடியும் வந்தால் தான் அவர்களுக்கு அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடிய திறனும், விளையாட்டு திறனும் அதிகமாகும். இது தவிர முக்கியமாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பழகவும், விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும்.

தற்போது அமெரிக்காவில் வீடியோ கேமிற்கு அடிமையான குழந்தைகள் மத்தியில் சண்டை ஏற்பட்டு ஒரு உயிர் பலியாகியுள்ளது. அமெரிக்காவின் மெர்னே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியும், 9 வயது சிறுவனும் வீட்டில் வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தனர்.  அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சிறுவன் தந்தையின் படுக்கை அருகில் அலமாரியில் இருந்த துப்பாக்கியை வைத்து, சகோதரியை நோக்கி சுட்டதால் குண்டு சகோதரியின் தலையின் பின்புறத்தில் பாய்ந்தது. 

சத்தம் கேட்டு விரைந்து வந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் மெம்பிஸ் (Memphis) என்ற இடத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற பின்பு., அங்குள்ள மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வு இதுவே முதன்முறை என்பதால், இதற்கு எவ்வாறு தீர்ப்பு வரும் என்ற குழப்ப நிலையில் உள்ளனர். விசாரணையில் உள்ளதால், எந்த குற்றப்பதிவும் பதிவு செய்யவில்லை.

இது போன்ற சம்பவங்கள் நிகழாது இருக்க கத்தி, துப்பாக்கி போன்ற ஆபத்தான பொருள்களை குழந்தைகள் கண்ணில் படமால் பாதுகாத்து வைக்க வேண்டும். சிறு வயதில், குழந்தைகள் உலகை மறந்து புன்னகையாக விளையாடி, மற்ற குழந்தைகளிடம் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் நண்பனாக இருக்க வேண்டும்.

Dijonae White. photo credit @dewhite FacebookDijonae White. photo credit @dewhite Facebook

வீடியோ கேம் தகராறில் தனது சகோதரியை கொன்ற 9வயது சிறுவன்