ads

அழிந்த மம்மூத் யானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மீண்டும் கொண்டு வர முயற்சி

குளோனிங் முறையில் மீண்டும் மம்மூத் யானைகளை கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

குளோனிங் முறையில் மீண்டும் மம்மூத் யானைகளை கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மம்மூத் எனப்படும் யானை வகைகள் பூமியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவின் பனி பிரதேசங்களில் வாழ்ந்த ஒரு உயிரினம். இந்த மம்மூத் யானைகளை மனிதர்கள் வேட்டையாடி அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மம்மூத் யானைகள், தற்போதுள்ள யானைகளை ஒப்பிடும் போது பலமானதாகவும், நீண்ட ரோமங்கள் உடையதாகவும், நீண்ட தங்கள் உடையதாகவும் இருந்துள்ளது.

இந்த மம்மூத் யானைகள் எடை ஆறு முதல் எட்டு டன் வரை இருந்திருக்க கூடும், ஆனால் ஆண் மாமூத்துக்கள் 12 டன் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அழிந்து போன இந்த யானைகளின் படிமங்கள் ஆர்க்டிக் பகுதிகளில் கண்டெடுக்க பட்டு வருகிறது. இது வரை கண்டெடுத்ததில் சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே மிக பெரியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் உள்ள டிஎன்ஏ-வை வைத்து குளோனிங் எனப்படும் முறையில் மீண்டும் மம்மூத் யானைகளை கொண்டு வர அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு மனிதனால் வேட்டையாடி அளிக்கப்பட்ட மம்மூத் யானைகள் மனிதர்களால் திரும்பவும் உருவாகவுள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தாள் ஜுராசிக் பார்க் படைத்த போன்று அழிந்து போன உயிரினங்கள் மீண்டும் பூமியில் நடமாடும்.

அழிந்த மம்மூத் யானைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மீண்டும் கொண்டு வர முயற்சி