ads
இனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு கிடையாது
வேலுசாமி (Author) Published Date : Jun 01, 2018 16:22 ISTWorld News
ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவத்துறை, இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஸ்விடிஸ்ஜ் அகாடமி, நோபல் அகாடமி, நார்வேஜியன் நோபல் கமிட்டி போன்றவற்றின் சார்பில் நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் உயரிய விருதுகளுள் ஒன்றான நோபல் பரிசு கடந்த 1901ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 117 வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
இதில் சுவீடனில் அமைதிக்கான நோபல் பரிசு தவிர விருதுகளும், நார்வேவில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலக்கிய துறையில் இனி நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்று நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கசுவோ இசிக்குரோ(Kazuo Ishiguro) என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக காத்திருந்த நிலையில் நோபல் பரிசு தெரிவுக்குழுவில் ஒன்றான சுவீடிஷ் அகாடமி உறுப்பினர் ஜீன் கிளாட் அர்னால்ட் என்பவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நோபல் பரிசு அடுத்த ஆண்டுடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து தேர்வுக்குழுவின் உறுப்பினர்களும் அடுத்தடுத்து பதவி விலகினர். இதனால் 2018-19 ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய நோபல் பரிசு அறக்கட்டளை இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் "நோபல் பரிசுகளை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்வுக்குழுவுக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கும் வரை இனி இலக்கிய படைப்புக்கு நோபல் பரிசு வழங்குவதில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.