ads
மது அருந்துபவர்கள் கட்டாயம் இதை வாசிக்க வேண்டும்
வேலுசாமி (Author) Published Date : Feb 28, 2018 17:50 ISTWorld News
உலகம் முழுவதும் மதுவிற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாழ்க்கையில் நடக்கும் துக்கம், இன்பம் போன்றவற்றை மறக்கவும், அனுபவிக்கவும் இந்த பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர். ஆனால் ஒரு சிலரது வாழ்க்கையில் எதற்காக குடிக்கிறோம் என்று தெரியாமல் கூட அதற்கு அடிமையாகி விடுவார்கள்.
குடிப்பவர்களும் கொஞ்சமாக குடிப்பதில்லை. கழுத்து வரை குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது, சும்மா ரோட்டில் செல்கிறவனை கூப்பிட்டு வம்பிழுப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகளில் பாதிக்கு மேல் குடி பழக்கங்களால் சாலை விபத்துகளின் மூலம் நிகழ்ந்துள்ளது.
இது தவிர அவர்கள் அளவுக்கு மீறி மது அருந்துவதால் அவர்களின் வாழ்க்கையும் நாளுக்கு நாள் குறைந்து இருக்கின்ற ஒரு வாழ்க்கையை 30 அல்லது 40 வயதிலே முடித்து விடுகின்றனர். இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா கழகம் சார்பில் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மது அருந்துபவர்கள் குறைவாக அருந்துவதால் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 2003-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 90 வயதிற்கும் அதிகமான வயதுடைய மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளருக்கு மேல் குடிப்பதில்லை. இதன் காரணத்தால் தான் அவர்கள் 90 ஐ கடந்தும் தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் குறைவாக மது அருந்தி வரும் மக்களின் உயிரிழப்பு விகிதம் 18 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையானது '90+ Study' என்ற பெயரில் சமீபத்தில் நடந்த ஆண்டாந்திர கூட்டத்தில் ஆய்வியல் துறை சமர்ப்பித்துள்ளது. எனவே நாட்டின் குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் குறைவாக அருந்த ஊடகங்கள் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.