ads
மன்னியுங்கள் இது என் தவறு சரி செய்வது என் பொறுப்பு செனட் கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்
கோகுல் சரவணன் (Author) Published Date : Apr 11, 2018 11:16 ISTWorld News
உலகளவில் அதிகம் விரும்பப்பட்ட மனிதர் மார்க் ஜுக்கர்பெர்க். அவர் என்னை மன்னியுங்கள் இது என்னுடைய தவறு இதற்கு நான் பொறுப்பு அதை திருத்திக்கொள்ள எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று அமெரிக்கா செனட்(அமெரிக்க பாராளுமன்ற குழு) கூட்டத்தில் கூறியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் அவரது செயலியான Facebook-ஐ உலகிற்கு அறிமுகம் செய்துவைத்த சில வருடங்களிலேயே அது இன்றைய தலைமுறையின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பலர் நாங்கள் உணவில்லாமல் கூட இறந்துவிடுவோம் ஆனால் facebook இல்லாமல் இருக்கமுடியாது என்று சொல்லும் அளவிற்கு facebook வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. அப்படிப்பட்ட ஒரு செயலியை வடிவமைத்த facebook நிறுவனம் சில நாட்களாக கடுமையான சட்ட சிக்கல்களில் சிக்கி விழிபிதுங்கி நிற்கின்றது.
கடந்த 2014-ஆம் ஆண்டு facebook பயனர்களிடமிருந்து அவர்களது ரகசிய தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் திருடியதாக அந்நாட்டு பத்திரிக்கை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. Facebook-இல் இருந்து ஒரு ஆளுமை சோதனை(Personality Checking) செயலியை ஒரு விளம்பரம் மூலமாக பதிவிறக்கிய பயனர்களிடமிருந்து அவர்களது தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல் திருடப்பட்டிருக்கிறது எனவும் திருடப்பட்டவர்களின் நண்பர்களிடமிருந்தும் தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டது. திருடப்பட்ட அந்த தகவல்கள் அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா போன்ற நாடு அரசியல் தலைவர்களுக்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விற்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதில் டொனால்ட் டிரம்பும் பயனடைந்திருக்கிறார் என்று அப்பத்திரிகை கூறியது.
இதனால் மார்க் ஜுக்கர்பர்கின் facebook செயலியை டெலீட் செய்யுமாறு போட்டிநிறுவனங்கள் ட்விட்டரில் #DeleteFacebook என்று பகிரத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து facebook-இன் நிறுவனர் மார்க்கை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அமெரிக்கா கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமெரிக்கா செனட்டர்கள் முன்பு ஆஜரான ஸுகர்பேர்க் செனட்டர்களின் கடுமையான கேள்விகளால் துளைக்கப்பட்டார்.
செனட்டர்களின் கேள்விகளுக்கு முன் அவர் பேசியதாவது, facebook என்றுமே ஒரு சிறந்த நம்பிக்கைக்குரிய நிறுவனமாகத்தான் இருந்திருக்கிறது. எங்கள் நோக்கம் பயனாளர்களின் ரகசிய தகவல்களை சேமிப்பது அல்ல மக்களை அவர்கள் விரும்புபவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வழிவகை செய்வது மட்டுமே. மக்களின் குரல்கள் உலகிற்கு தெரியப்படுத்த ஒரு கருவியாக செயல்படுவதே எங்கள் நோக்கம். இதுவரை facebook-ஆல் 70 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகர்கள் பயனடைந்திருக்கிறார்கள், பலர் facebook செயலியை நிதி திரட்ட பயன்படுத்தியிருக்கிறார்கள், மேலும் பல நல்ல முயற்சிகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் முதல் நோக்கம் எண்களின் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பது. ஆனால் இப்போது நாங்கள் செய்திருக்கும் அணைத்து பாதுகாப்பு அம்சங்களும் இனிவரும் காலத்திற்கு போதாது என்று கருதும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அதை சரி செய்வதற்கான முயற்சிகள் முழு வேகத்தில் செய்துகொண்டிருக்கின்றோம்.
இனி வரும் facebook-ன் மேம்படுத்தப்பட்ட செயலிகள் மக்களை ஒருவரோடு ஒருவர் தொடர்பில் வைத்திருப்பது மட்டும் அல்லாமல் அந்த தொடர்பு நேர்மறையானதாகவும் இருக்க உதவும். இதை செய்வதற்கு எங்களுக்கு கால அவகாசம் மட்டுமே இப்போது தேவைப்படுகிறது. Facebook-இன் முன்னுரிமை அதன் பயனாளர்களுக்கே தவிர விளம்பரத்தார்களுக்கு அல்ல. நான் இந்த நிறுவனத்தை எனது கையில் வைத்திருக்கும்வரை பயனர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறினார்.