ads

ஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே

இந்த உலகத்தில் ஏலியன் குறித்த பல சந்தேகங்களுக்கு  விடைகள் தெரியாமலே உள்ளது. இதில் ஒரு சில கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார் வானவியாளர் மைக்கல் ஹிப்கே.

இந்த உலகத்தில் ஏலியன் குறித்த பல சந்தேகங்களுக்கு விடைகள் தெரியாமலே உள்ளது. இதில் ஒரு சில கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார் வானவியாளர் மைக்கல் ஹிப்கே.

நாம் வாழக்கூடிய இந்த பூமியில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என 1.3 மில்லியன் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அனைத்து உயிரினங்களையும் மனிதர்கள் அறிவால் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வருகிறான். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனிதர்களின் அறிவினால் பூமியை தாண்டி வளிமண்டலத்தில் இருக்கும் புது புது கிரகங்களை கண்டறிந்து அதனை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த உலகத்தின் அழிவானது புவி வெப்பமயமாதல், மனிதர்களால் காடுகள், நீர்நிலைகள் அழிப்பு, இது தவிர மனிதர்கள் வருங்காலத்தில் கண்டு பிடிக்கும் ரோபோட்கள், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் மூலமும் அழியலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் இந்த பால்வழி மண்டலங்களில் ஏதேனும் ஒரு கிரகத்தில் வசித்து கொண்டிருக்கும் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகளாலும் அழிய நேரிடும் என மறைந்த ஆய்வாளர் ஸ்டிபன் ஹாக்கிங் முதல் பல ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர். இந்த ஏலியன் என்ற வார்த்தை எதன் மூலம் உருவானது வேற்று கிரகங்களில் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து பல சந்தேகங்கள் மர்மங்களாகவே உள்ளது. ஆனால் இது வரை ஏலியன் என்ற வார்த்தையை மனிதர்களின் கற்பனை திறன்கள் மூலம் உருவாகும் சினிமா படங்களில் மட்டுமே கண்டு வருகிறோம்.

ஒரு உண்மையான ஏலியன் போன்று சினிமாவில் மக்களுக்கு காண்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏலியன் குறித்த சந்தேகங்களும், ஆர்வங்களும் அதிகரித்து வருகின்றன. மனிதர்களும் ஒவ்வொரு நாளும் புது புது கிரகங்களை கண்டு பிடித்து அதில் ஏலியன் இருக்கின்றார்களா இல்லையா என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அதற்கான விடைகள் வெறும் கேள்விகளாக மட்டுமே உள்ளது. ஏலியன்கள் மனிதர்களின் அறிவு திறன் மற்றும் உடல் வலிமையை விட பல மடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என்று அனைவரும் நம்புகின்றனர்.

இதனால் விரைவில் பூமியை கைப்பற்ற அனைத்து உயிரினங்களையும் அழிப்பார்கள் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இது போன்ற பல வதந்திகளும் சந்தேகங்களும் பரவி வரும் நிலையில் ஜெர்மனி நாட்டிலுள்ள சோன்னிபெர்க் அப்செர்வேட்டரி எனும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே என்பவர் ஏலியன் குறித்த சில கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார். வேற்று கிரக வாசி எனப்படும் ஏலியன்களுக்கு முதலில் அவர்கள் வசித்து வரும் கிரகங்களின் ஈர்ப்பு விசையை தாண்டி பயணிப்பதே முதல் சவாலாக இருக்கும்.

ஏலியன்களை விட குறைவான அறிவு கொண்ட மனிதர்களே விண்வெளிக்கு சென்று ஆய்வு செய்யும் போது ஏலியன்களால் ஏன் ஈர்ப்பு விசையை தாண்டி பயணிக்க முடியாது என்ற கேள்விக்கு, இது வரை ஆய்வு செய்த கிரகங்களில் பூமியை போன்று  உயிரினங்கள் வாழக்கூடிய சூழலை கொண்டுள்ளது சூப்பர் பூமி (Super Earth). இந்த கோளில் அதிகப்படியான பாறைகள் நிறைந்த தடினமான சுற்றுசூழலை கொண்டு இருப்பதால் அங்கு ஏலியன்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. பூமியை ஒப்பிடுகையில் சூப்பர் பூமியின் புவி ஈர்ப்பு விசையும், எடையும் பல மடங்கு அதிகம்.

இப்படி அதிகப்படியான ஈர்ப்பு விசை கொண்ட கிரகத்தில் அதன் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு செல்வது சற்று கடினம் தான். ஆனால் எரிவாயுவுக்கு பதிலாக நியூக்ளியர் ப்ரோபல்சன் (Nuclear Propulsion) எனப்படும் அணுக்கதிர் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை கொண்டு உருவாகும் இயந்திரங்கள் அல்லது ராக்கெட்டை கொண்டு அது சாத்தியமாகலாம். ஒரு வேளை ஏலியன்கள் உண்மையில் இருந்திருந்தால் இந்நேரத்திற்குள் பூமி ஏலியன்களின் தாக்குதலை சந்தித்திருக்க வேண்டும். இது போன்ற பல கேள்விகளுக்கு வருங்காலம் தான் பதில் சொல்லும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சினிமா மூலமாக அமைகிறது. ஏலியன்கள் மனிதர்களை விட புத்திசாலிகள் வலிமையானவர்கள் என்றெல்லாம் தெரிவித்து வருகின்றனர். அங்கு தான் இடிக்கிறது. நாம் வாழும் இந்த உலகத்தில் உள்ள பல உயிரினங்களுக்கு அறிவுகள் மாறுபட்டு இருக்கும் போது ஏலியன்கள் என்று நம்பப்படும் வேற்று கிரக வாசிகளுக்கு அறிவு மனிதர்களை விட குறைவாக இருக்குமா, அதிகமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் இதற்கெல்லாம் எதிர்காலமே பதில் சொல்லும்.

ஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே