ads

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ

wildfire in america

wildfire in america

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்திற்கு அருகே வெஞ்சுர கவுண்டி மலையோர பகுதியை ஒட்டியுள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பித்த இந்த காட்டுத்தீ தற்போது சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட இடங்களில் பரவியுள்ளது. அமெரிக்காவில் இந்த காட்டுத்தீயினால் கடும் புகைமூட்டம் காணப்படுகிறது. இந்த காட்டுத்தீயினால் 500 கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதன் மூலம் ஏற்பட்ட வெப்பத்தினால் எரிபொருள் தொட்டிகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

ஏற்கனவே அப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 8 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த காட்டுத்தீயானது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதால் வேகமாக பிற இடங்களுக்கும் பரவியுள்ளது. பொதுவாக காட்டுத்தீ பரவுவதற்கு முக்கிய காரணங்களாக மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகளினால் ஏற்படும் தீப்பொறி, தாமாக தீப்பற்றுதல் போன்றவை அமைகிறது. மேலும் காய்ந்த மரங்கள், செடிகள் உராய்வதால் காட்டுத்தீ பற்றுகிறது. இந்த வகையான உராய்வு மூங்கில் மரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. இம்மாதிரியான இயற்கை காரணிகள் காட்டுத்தீ பரவ காரணமாக இருந்தாலும் மனிதருடைய நடவடிக்கைகள் காரணமாக அதிக அளவில் காட்டுத்தீ பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

மனித நடவடிக்கைகளான  தீவைத்தல், அணையாத சிகரெட் துண்டுகள், மின்சாரங்களில் இருந்து உருவாகும் தீப்பொறி, பல கருவிகளில் இருந்து வெளிப்படும் தீப்பொறி போன்றவை காட்டுத்தீ பரவ காரணமாகிறது. காட்டுத்தீ ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, வடமேற்குச் சீனா போன்ற இடங்களில் மின்னல் காட்டுத்தீ ஏற்படுவதற்கான முதன்மைக் காரணமாக உள்ளது.மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, பிஜி, நியூசிலாந்து ஆகிய நாடுகளில், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, நிலமீட்புக்கான எரிப்பு, கவனமின்மை போன்ற மனித நடவடிக்கைகளே பெரும்பாலான காட்டுத்தீக்கள் உருவாகக் காரணமாகின்றன. பொதுவாக நெருப்பு அனைத்துப் பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது.

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ