ads
15 வருடங்களுக்கு பிறகு பூமிக்கு அருகாமையில் வரும் செவ்வாய் கிரகம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jun 19, 2018 17:00 ISTWorld News
தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புது புது கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆராய்ந்து வருகின்றனர். சூரிய குடும்பத்தையும், அதில் சுற்றியுள்ள கிரகத்தின் அமைப்பையும் நினைத்தாலே வியப்பாக இருக்கும். ஆனால் பல்லாயிரக்கணக்கான பால்வழி மண்டலத்திற்கு நடுவே ஏதோ ஒரு மூலையில் உள்ள சூரிய குடும்பத்தில் உள்ள பூமி என்ற கிரகத்தில் வசித்து வருகிறோம்.
நமது பூமியில் இருந்து மேல்நோக்கி பார்த்தால் நட்சத்திரங்கள், சூரியன் போன்றவை வெகு தொலைவில் அமைந்துள்ளதால் புள்ளிகளாகவே காணப்படும். சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருவதால் பல வருடங்களுக்கு ஒரு முறை பூமிக்கு மிகவும் அருகாமையில் வந்து செல்கின்றன. அந்த வகையில் இறுதியாக கடந்த 2003இல் செவ்வாய் கிரகமானது பூமிக்கு அருகாமையில் வந்து சென்றது.
15 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அதிசய நிகழ்வு தற்போது மீண்டும் நடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையாமான நாசா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி செவ்வாய் கிரகம், வரும் ஜூலை 27 ஆம் தேதி மிக அருகாமையில் வரவுள்ளது. இதனால் அந்நாளில் செவ்வாய் கிரகமானது மிகவும் பிரகாசமான வெளிச்சத்துடன் பெரியதாக காணப்படும். இந்த அதிசய நிகழ்வானது ஒரு வாரம் நீடிக்க உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.