ads

பேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்

பேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு டிவிட்டர் நிறுவனமும் வாடிக்கையாளர் தகவலை முறைகேடாக பயன்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு டிவிட்டர் நிறுவனமும் வாடிக்கையாளர் தகவலை முறைகேடாக பயன்படுத்தியுள்ளது.

தற்போது டிவிட்டர் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனம் போன்றே பயனாளர்களின் தகவல்களை முறைகேடாக அனாலிட்டிக்கா ரிசர்ச்சர் என்ற நிறுவனத்திற்கு பணத்திற்காக விற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டுகளில் அலெக்ஸ்சாண்டர் கோகன் என்பவர் 'இது உங்கள் டிஜிட்டல் வாழ்க்கை (This is Your Difital Life)' என்ற செயலியை கொண்டு பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தகவல்களை அவர்கள் அனுமதி இன்றி கைப்பற்றினார்.

இதன் பிறகு ஜிஎஸ்ஆர் என்ற நிறுவனமும் கடந்த 2015-ஆம் ஆண்டில் டிவிட்டர் வாடிக்கையாளர்களின் தகவல்களை ஒரு நாளைக்கு மட்டும் அணுகுவதற்கு பணம் அளித்து 2014-15 வரையிலான காலங்களில் பயனாளர்கள் பதிவு செய்த கருத்துக்களை கைப்பற்றியுள்ளதாக டிவிட்டர் தெரிவித்திருந்தது. ஆனால் இதில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் கைப்பற்ற வில்லை எனவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த சர்ச்சை குறித்து பேசிய அலெக்ஸாண்டர் கோகன், சில நிறுவனங்களின் அறிக்கைககள் மட்டும் தயாரிக்க இந்த தகவல்கள் பயன்படுத்த பட்டுள்ளது.

ஆனால் இதில் டிவிட்டர் தளத்தின் விதிமுறைகள் மீறி பயனாளரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்கா மற்றும் ஜிஎஸ்ஆர் நிறுவனங்கள் டிவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் டிவிட்டர் தலத்தில் விளம்பரங்களை பகிரவோ, வாடிக்கையாளர் தகவலை பெறவோ நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு பிறகு சர்ச்சையில் சிக்கும் டிவிட்டர்