ads
பூமி போன்ற கிரகங்கள் உருவானதை கண்டுபிடிக்க நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைகோள்
வேலுசாமி (Author) Published Date : May 06, 2018 11:36 ISTWorld News
வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து அறிய பல்வேறு அமைப்புகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞானிகள் பல புது புது வடிவ கிரகங்களை கண்டுபிடித்து வருகின்றனர். சமீபத்தில் கருப்பு நிற கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி விண்வெளியில் ஆய்வு செய்வதன் மூலம் பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய வாழ்ந்து கொண்டிருக்கும் கிரகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது திடப்பொருட்களால் ஆன பூமி போன்ற கிரகங்கள் எப்படி உருவானது? என்பதை ஆய்வு செய்ய செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா ’இன்சைட்’ என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியுள்ளது.சமீபத்தில் இஸ்ரோவால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டு பல தகவல்களை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்தில் இருந்தபடி அதன் அடிப்பகுதி மற்றும் பூமி போன்ற கிரகங்கள் உருவானது எப்படி? என்பதை ஆய்வு செய்ய ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள விமானப்படை தளத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சரியாக இன்று அதிகாலை 4.05 மணியளவில் 'அட்லஸ் V' என்ற ராக்கெட் மூலம் ’இன்சைட் மார்ஸ் லேன்டர்’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்ப்பட்டது. விண்னில் செலுத்திய நான்காவது நிமிடத்தில் ராக்கெட் என்ஜினின் பூஸ்டர் அணைக்கப்பட்டு, பின்னர் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.