ads
அதிவேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் - அதிகரிக்கும் கடல் மட்டம்
வேலுசாமி (Author) Published Date : Jun 15, 2018 12:48 ISTWorld News
மனிதர்கள் வாழ்வதற்கு சூழலற்ற, முழுவதும் பனிப்பாறைகளால் நிறைந்த அண்டார்டிகா கண்டமானது 14மில்லியன் கிமீ2 பரப்பளவை கொண்டுள்ளது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் உலக வெப்பமயமாதல், பருவகால மாற்றங்கள் போன்றவற்றினால் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிகப்படியான அளவில் உருகி வருகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடல் மட்டம் வெகுவிரைவாக உயர்ந்த கடலோர பகுதிகளை கடலுக்குள் மூழ்கடிக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு இயற்கை அளித்த எச்சரிக்கை ஆகும். பனிப்பாறைகள் உருகுவதை கட்டுப்படுத்தாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் உருகி கடல் மட்டம் 60 அடி வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அண்டார்டிகாவில் 6500SqFt அளவில் பனிப்பாறைகள் உருகியுள்ளது. இதனால் மொத்தமாக 3 ட்ரில்லியன் பனிப்பாறைகள் உருகியுள்ளது. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்தில் இரண்டு பங்கு பனிப்பாறைகள் உருகியுள்ளது. தற்போது பனிப்பாறைகள் உருகும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 2012இல் 76பில்லியன் டன் அளவில் உருகி வந்த பனிப்பாறைகள் தற்போது 216 பில்லியனாக மும்முடங்கு உயர்ந்து ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை செயற்கைகோள் மூலம் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிரூபித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பூமியில் நிலங்களின் பரப்பளவு குறைந்து உயிரினங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகத்தின் அழிவு என்பது எப்போதோ ஆரம்பமாகி தற்போது பல்வேறு இடங்களில் இயற்கை சீற்றங்கள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிறிது சிறிதாக அழிந்து வரும் உலகம் மொத்தமாக அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆய்வாளர்களுக்கு ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.