ads
அமெரிக்க உளவு துறையில் வேவு பார்க்க போகும் ரோபோட்கள்
வேலுசாமி (Author) Published Date : Apr 25, 2018 10:20 ISTWorld News
அமெரிக்காவின் உளவு துறையான சிஐஏவில் நல்ல பயிற்சியளிக்கப்பட்ட வீரர்கள் பணியமர்த்தப்பட்டு குற்றவாளிகளை கண்காணிப்பது, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக பல பணிகளை செய்து வருகின்றனர். மக்களிடம் சிஐஏ பிரபலமானதற்கு சினிமா ஒரு முக்கிய காரணம். சிஐஏ வீரர்களின் திறமையையும், அவர்களின் வேலை பளுவையும் எடுத்துரைக்கும் விதமாக ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் (James Bond), மிஷன் இம்பாஸிபிள் (Mission Impossible), ஜேசன் போர்ன் (The Bourne) போன்ற பல படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.
ஆனால் படங்களில் காண்பது போல் நிஜ வாழ்க்கையில் நடந்து விடுவதில்லை. இது போன்ற பணிகளை செய்ய குடும்பம், தன் வாழ்க்கை இவற்றை மறந்து நாட்டுக்காக தரும் வேலைகளை செய்து முடிக்கும் ரோபோட் போன்ற மனிதர்கள் தான் தேவைப்படும். தற்போது இந்த வேலைக்காக சிஐஏ நிஜ ரோபோட்டை பணியமர்த்த உள்ளது. ஆர்ட்டிபிஸல் இன்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட, சுயமாக சிந்திக்கும் திறன் கொண்ட இந்த ரோபோட்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக உளவு வேலைகளை கையாள உள்ளது.
இந்த ரோபோட்கள் பணியமர்த்துவதன் மூலம் சிஐஏ பிரிவில் பணியில் இருக்கும் வீரர்களுக்கு வேலை பளு குறையும். தற்போது இந்த ரோபோட்களை உருவாக்கும் பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ரோபோட்களுக்கு உரிய சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு பென்டகன் உதவியுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்த உள்ளனர். மேலும் இந்த முயற்சி வெற்றிகரமாக செயல்பட்டால் இந்த ரோபோட்களை ராணுவ துறையிலும் பணியமர்த்த உள்ளனர்.