ads
10 வருடத்திற்கு மேல் எஜமானருக்காக ஒரே பூங்காவில் காத்திருக்கும் நாய்
ராசு (Author) Published Date : Mar 31, 2018 11:16 ISTWorld News
நாய்கள் நன்றியுள்ளது, விசுவாசமுள்ளது என்பார்கள், அவைகள் நம்முடன் வசிக்கும் போது நாம் பேசும் மொழிகளின் செய்கைகளை புரிந்துகொண்டு நம்முடன் வாழ்ந்து வருகிறது. நாய்கள், தனது எஜமானர் இல்லை என்றால் சில சமயங்களில் உணவு உண்பதும் கிடையாது. சில வீடுகளில் உள்ள நாய்கள் எஜமானர்களின் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்வதும், பாதுபாப்பதும் உண்டு. இப்படி ஒரு பந்தம் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உண்டு.
லாஸ் ஏஞ்செல்ஸ் பூங்கா அருகில் வசிக்கும் "Jhon Hwang" என்பவர் படத்தில் உள்ள நாயை பற்றி கூறியது மிகவும் ஆச்சர்ய படவைத்தது, "இந்த நாய் எனக்கு தெரிந்தவரை 10 வருடத்திற்கு மேல் இங்கு வசிக்கிறது. நான் தினமும் காலையில் நடைபயிற்சியின் போது இதனை பார்ப்பதுண்டு. யாரையும் இது தொந்தரவு செய்ததில்லை, பூங்காவிற்கு வருபவர்கள் எதேனும் சாப்பிட கொடுத்தால், அமைதியாக சாப்பிடும். வேறு எந்த ஒரு விலங்குகளிடமோ விளையாடி பார்த்ததில்லை. பல முறை இந்த நாயை பிடிக்க விலங்குகள் காப்பகத்தில் இருந்து முற்பட்டபோது, தந்திரமாக தப்பித்து விடும், எளிதில் சிக்கியதில்லை.
எங்களது பகுதியில் வசிக்கும் பலர் நாய்களின் மேல் உள்ள அன்பால், அதற்கு உணவு கொடுப்பதால் இதுநாள் வரையில் இங்கு உயிர்வாழ்கிறது. நாய்களின் தன்மையறிந்து அன்பாக இந்த நாயை யாராவது தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டால் நல்லது. ஆனால் சில சமயங்களில் இப்படி சுதந்திரமாக சுற்றுவதே அதற்கு நல்லது என்றுபடும்" என்று கூறினார். அங்கு உள்ள சிலர், இந்த நாய் தனது எஜமான் தவறுதலாக இங்கு விட்டு சென்றிருக்கலாம், அவரின் வருகைக்காக இதுநாள் வரையில் காத்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இது சற்று வேடிக்கையாக இருந்தாலும், நாய்களின் இது போன்ற குணாதிசியங்கள் நம்மலை மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு வசிக்கும் வேறுஒரு முதியவர், இது குறைந்தது 14 வருடங்களாக இங்கு வசிக்கும் என தெரிவித்தார், அவரின் புகைப்படமும் இணைக்க பட்டுள்ளது. மனிதர்கள் எந்த ஒரு தொந்தரவும் செய்யாததால், அருகில் நடந்தால் கூட, அது சாதாரணமாகவே இருக்கும் என சிலர் தெரிவித்தனர். "Jhon Hwang" என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதைப்பற்றி பகிர்ந்தபோது, அனைவரும் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். தெருவில் உள்ள நாய்களை கொஞ்சம் கூட கவனிக்காத ஒரு சிலர் மத்தியில், இவர்களை போன்ற சிலரால் தான் இன்னும் நாய்கள் மனிதர்களுக்கு நன்றியுடன் இருக்கிறது.