ads

48 நிமிடங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சந்திப்பு

அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரியா அதிபர் இருவரும் முதன் முறையாக சந்திக்கும் நிகழ்வு தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரியா அதிபர் இருவரும் முதன் முறையாக சந்திக்கும் நிகழ்வு தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்தது. இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு தொடங்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு 48 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்றது. சிங்கப்பூரில் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா என்ற ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான அணு ஆயுத பிரச்னை, பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வட கொரியா உருவான பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதன் முறையாக சந்திக்கும் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய டொனால்டு ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பு எதிர்பார்த்ததை போல சிறப்பானதாக அமைந்துள்ளது. இவருடன் இணைந்து மிக பெரிய பிரச்னைகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் இருந்து வரும் நிலையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயேயான அமைதிக்கு வழிவகுக்கும் என்று வட கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். தற்போது இரு நாட்டு தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். தனியாக ஆலோசனை நடைபெறுவதால் இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க உள்ளனர்.

48 நிமிடங்கள் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க வடகொரியா அதிபர்கள் சந்திப்பு