ads
மணிலா பெவிலியன் மற்றும் சூதாட்ட விடுதி தீ விபத்தில் நான்கு பேர் பலி
ராசு (Author) Published Date : Mar 18, 2018 17:26 ISTWorld News
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் இன்று நடந்த தீ விபத்தில் நான்கு பேர் பலியாகினர். சுற்றுலா தலமான மணிலாவில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் சூதாட்ட விடுதியின் பெயர் மணிலா பெவிலியன். திடீரென ஏற்பட்ட இந்த தீயை சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டத்தில் 300 பேர் பாதுகாப்பாக வெளியேற்றபட்டனர். இதில் மேல்தளத்தில் இருந்த சிலரை ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்திற்கான உண்மை நிலவரம் குறித்து எந்த தகவலும் இல்லை, அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், விசாரணை இன்னும் சில மணி நேரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
பேரழிவு பொறுப்பில் உள்ள " ஜானி யூ " அவர்கள் கூறியது, தீயினால் ஏற்பட்ட கடும் புகைவில் மீட்பு பணி மிகவும் கடினமாகவே இருந்ததாகவும், மேலும் இரண்டு பேர் பற்றிய தகவல் இல்லாததால் அவர்கள் சிக்கியிருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
Helicopter on the rescue. Fire at Manila Pavilion Hotel and Casino pic.twitter.com/H0HTepUibz
— garnet (@garnetcorpuz) March 18, 2018
Manila Pavilion Hotel and Casino fire acident. photo credit @garnetcorpuz
Manila Pavilion Hotel and Casino photo credit @garnetcorpuz