ads
உலகை மாற்றியமைக்க கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்
வேலுசாமி (Author) Published Date : May 09, 2018 16:25 ISTWorld News
போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வோர் ஆண்டும் அரசியல், சினிமா, கல்வி, அறிவியல், வர்த்தகம் போன்ற பல துறைகளில் திறமையாக விளங்கும் நபர்களை வரிசை படுத்தி பட்டியலிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது உலகின் சக்தி வாய்ந்த 75 நபர்களின் பட்டியலை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மிகவும் சக்தி வாய்ந்த மனிதர் என்ற பட்டியலில் சீன அதிபர் க்ஸி சின்பிங்க் முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் ஜெர்மனி அதிபர் அங்கேலா மேர்க்கெல் என்பவரும், ஐந்தாவது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெஸோஸ் என்பவரும், ஆறாவது இடத்தில் வாடிகன் நகரத்தின் இறையாண்மை தலைவரான போப் பிரான்சிஸ் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் பிஸ்னஸ் மேக்நட் பில்கேட்ஸ் மற்றும் சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மான் அல் சவுத் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பிறகு 9வது இடத்தில் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
கடந்த 2016இல் கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான அவரது செயல் மிகவும் துணிச்சலானது என்றும் இந்தியாவின் மிக பிரபலமான சக்தி வாய்ந்த மனிதராகவும் மோடி திகழ்கிறார் என்றும் போர்ப்ஸ் பிரதமரை புகழ்ந்துள்ளது.இவருக்கு பிறகு பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 13வது இடத்திலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி 32வது இடத்திலும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்க் யுன் 36 வது இடத்திலும் உள்ளனர். மேலும் தற்போது உலக மக்கள் தொகையில் 7.5 பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த பட்டியலில் 75 இடங்களை பிடிக்கும் மாமனிதர்கள் உலகை மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளனர் என வும் போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.