ads
ஆப்பிரிக்கா கண்டத்தில் 3000கிமீ தூரத்திற்கு ராட்சஷ பிளவு
வேலுசாமி (Author) Published Date : Apr 05, 2018 17:46 ISTWorld News
பூமி தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகிறது. நாம் வாழும் இந்த பூமியில் ஆக்கம், அழிப்பு போன்ற செயல்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கிறது. தற்போதுள்ள பூமியில் 71 சதவீதம் நீரும், 29 சதவீதம் நிலப்பரப்பும் சூழ்ந்துள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிலப்பரப்பானது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பருவகால மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் நிலப்பரப்பு சிறிது சிறிதாக அழிந்து தற்போது 21 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளது.
இயற்கை காரணிகளால் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்ட நிலப்பரப்புகளை ஆய்வாளர்கள் சமீப காலமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாம் பாடப்புத்தகங்களில், பூமி தோன்றியபோது முற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரே ஒரு நிலப்பரப்பு (கோண்டுவானா) மட்டும் இருந்ததாக படித்திருக்கிறோம். இந்த கோண்டுவானா நிலப்பரப்பு தான் தற்போது சிறிது சிறிதாக உடைந்து கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஊராட்சி என பிரிந்துள்ளது.
தற்போதுள்ள இந்த 21 சதவீத நிலப்பரப்புகள் இயற்கை காரணிகளால் ஏதாவது ஒரு மூலையில் அழிந்து கொண்டுதான் வருகிறது. இதற்கு பூமியின் தற்சுழற்சி மாற்றங்கள், மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் பனிக்கட்டி உருகுவதால் அதிகரிக்கும் கடல் மட்டம் என பல்வேறு செயல்பாடுகள் காரணமாக அமைகிறது. இந்நிலையில் தற்போது ஆப்பிரிக்காவின் தென்மேற்கு கென்யாவில் ராட்சஷ அளவிலான பிளவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த 50 அடிக்கு மேலான நீளம் மற்றும் அகலம் கொண்டு 300கிமீ தூரத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்த பிளவானது வீடுகள், சாலைகள், நிலப்பரப்புகள் போன்றவற்றில் மிக பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிளவானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதன் மூலம் விரைவில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிளவிற்கு ஆப்பிரிக்க நிலப்பரப்பிற்கு அடியில் இருக்கும் சோமாலி மற்றும் நுபியன் தட்டுகளின் நகர்வுகளே காரணமாக உள்ளது. சோமாலி தட்டையானது நுபியன் தட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2.5 செமீ அளவில் நகர்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்தும் இயற்கையின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு இயற்கை சீற்றங்களும் மனிதர்களின் எச்சரிக்கைக்கு முன்போ அல்லது தாமதமாகவோ நடந்து வருகிறது. மனிதர்கள் அறிவை பயன்படுத்தி எத்தகைய நவீனத்தை வழிபடுத்தினாலும் இயற்கை சீற்றங்களுக்கு முன்பு சற்றும் ஈடு கொடுக்க முடிவதில்லை.