ads
கலிபோர்னியா யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி சூடு
வேலுசாமி (Author) Published Date : Apr 04, 2018 12:53 ISTWorld News
உலக மக்கள் அனைவரிடமும் பிரபலமான யூடியூப் (Youtube) நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும், துப்பாக்கியால் சுட்ட நபரும் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்ததாகவும் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் அதிகாரி ஈத் பார் பெர்னி கூறும்போது "யூடியூப் தலைமையகத்தில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்துள்ளார். இறந்த அந்த பெண் யாரென்பது குறித்த தகவல் தெரியவில்லை. இந்த பெண்ணுடன் இருந்த நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப் பணியாளர் ஒருவர் அலுவலகத்தில் திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டது. சத்தம் அறிந்து அனைவரும் அலறி அடித்து ஓடினர். தற்போது நானும் பணிபுரியும் ஊழியர்களும் ஒரு அறையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த யூடியூப் அலுவலகத்தில் 1700 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.