ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு 55 பேர் பலி

       பதிவு : Mar 02, 2018 15:29 IST    
ஐரோப்பாவில் நிலவி வரும் பனிப்புயலால் தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், Image Credit - Jarek Tuszyński (Wikipedia) ஐரோப்பாவில் நிலவி வரும் பனிப்புயலால் தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர், Image Credit - Jarek Tuszyński (Wikipedia)

ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், ரயில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் போன்றவை முடங்கியுள்ளது. அங்கு நிலவி வரும் பனிப்புயலால் தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 21 பேர் போலந்து நாட்டை சேர்ந்தவர்கள். ஏராளமான மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அன்றாட தேவைக்கு சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இன்று வழக்கமாக இல்லாமல் பனிப்பொழிவு அதிகமாவதால் மக்கள் வீட்டில் இருக்கும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவு காரணமாக வீடு இல்லாதோர், ஏழைகள், மாற்று திறனாளிகள், நோயுற்றவர்கள் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் குளிர் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகக்கூடும், ஆகையால் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பனிபொழிவால் மக்கள் அவதிப்பட்டு வந்தாலும் ஒரு சிலர் இந்த சூழலை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

 

இந்த பனிப்புயல் காரணமாக டப்ளின் விமான நிலையம் மற்றும் ஆம்ஸ்டரடாம் விமான நிலையங்களில் விமானங்கள் இயங்க வில்லை. இந்த பனிபொழிவால் மத்திய தரைக்கடலின் தென் பகுதி வரையில் வழக்கத்தை விட அதிகமாக குளிர் உணரப்பட்டுள்ளது. வரும் சில தினங்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இந்த பனிபொழிவால் சுவிட்சர்லாந்தில் -7 டிகிரி வெப்பநிலையும், லண்டன் நகரில் -12 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.


ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவு 55 பேர் பலி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்