ads
காட்டு தீயால் நாசமடைந்த ஸ்வீடன் - 74 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி
புருசோத்தமன் (Author) Published Date : Aug 11, 2018 12:47 ISTWorld News
நாம் வாழும் பூமியானது ஒவ்வொரு நாளும் தனது வெப்பத்தை அதிகப்படுத்தி வருகின்றன. காடுகள், நிலங்கள் அழிக்கப்படுவதால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உலகின் ஏராளமான இடங்களில் காட்டு தீ பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. தற்போது அமெரிக்க, ஐரோப்பா போன்ற இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
காட்டுத்தீ நீடித்து கொண்டே வருவதால் மரங்கள், செடி கொடிகள், விலங்கினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து வருகின்றன. ஐரோப்பா கண்டத்தில் நீடித்து வரும் காட்டுத்தீயினால் ஸ்வீடனின் நிலப்பரப்பு கடுமையாக வறண்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை செயற்கை கொள் மூலம் படம்பிடித்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது நிலவி வரும் வறட்சியானது கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் தங்களது அடிப்படை தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஐரோப்பியா கண்டத்தின் மூன்றாவது மிகப்பெரிய நாடான ஸ்வீடனில் பால்க்டிக் கடலில் இருந்து ஆர்க்டிக் வட்டத்தை நோக்கி வரும் அனல் காற்றால் காட்டுத்தீ அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆய்வாளர்கள் அனுப்பிய புகைப்படங்களில் ஸ்வீடனில் உள்ள காட்லாண்ட், ஸ்கேன், ஸ்மாலன்ட், அப்சலா போன்ற இடங்களின் தோற்றம் முன்பு இருந்ததை விட வறண்டுபோய் உள்ளது. காட்டுத்தீயினால் ஸ்வீடனில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் காடுகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள் எரிந்து சாம்பலாகின்றன.