ads

சவூதி அரேபியாவில் கணவரின் மொபைலை மனைவி மார்கள் உளவு பார்த்தால் சிறை தண்டனை

கணவரின் அலைபேசியை உளவு பார்த்தல் ஓராண்டு சிறை தண்டனை.

கணவரின் அலைபேசியை உளவு பார்த்தல் ஓராண்டு சிறை தண்டனை.

உலகில் கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. இந்நாட்டில் முக்கியமாக பெண்களுக்கு அதிகப்படியான சட்டங்கள் உள்ளது. அங்கு பெண்கள் பர்தாவை அணியாமல் பெண்கள் வெளியில் செல்ல கூடாது. ஆனால் இந்நாட்டில் தான் அதிகப்படியான விவாகரத்து வழக்குகளும் நடந்து வருகிறது. அதற்கு பெரும்பாலும் தன்னுடைய கணவரின் ரகசிய உரையாடல்களையே ஆதாரமாக காண்பிக்கின்றனர்.

இதனை பொறுத்து அங்கு விவாகரத்து அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய கணவரின் மொபைலை மனைவி மார்கள் உளவு பார்த்தல் சிறை தண்டனை நிறைவேற்ற புதிய சட்டத்தை தீர்மானித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி சவூதி அரேபியாவில் கணவர் மாரும் சரி, மனைவி மார்களும் சரி எவரேனும் அனுமதி இல்லாமல் உளவு பார்த்தால் அவர்களுக்கு சவுதி அரேபியாவின் ரியாத்தில் 5 லட்சம் அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் தனிநபரின் தகவல்கள் திருடப்பட்டு அவருக்கு மிரட்டல்களும், பலவிதமான வழக்குகளும் நிகழ்கிறது. இதனை பெரும்பாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் தடுக்க முடியும். மேலும் தனிநபர் தகவல்களும் முறையாக பாதுகாக்கப்படும். இதனை நோக்கமாக கொண்டு இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவில் கணவரின் மொபைலை மனைவி மார்கள் உளவு பார்த்தால் சிறை தண்டனை