ads

டிவிட்டரில் உண்மையானதை விட பொய்யான தகவல்களை மக்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல்

டிவிட்டரில் உண்மையை விட பொய்யான தகவல்கள் வேகமாக பரவுகின்றன.

டிவிட்டரில் உண்மையை விட பொய்யான தகவல்கள் வேகமாக பரவுகின்றன.

மக்களிடையே டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முகேஷ் அம்பானியின் ஜியோ வந்ததிலிருந்து பெரும்பாலானோர் மொபைல், லேப்டாப் உபயோகப்படுத்துவது அதிகமாகியுள்ளது. வளர்ந்து வரும் நாகரிக உலகில் உலகத்தில் அனைத்து துறை சம்பந்தமான தகவல்கள் மற்றும் செய்திகள் சிறு மொபைல் மூலம் உட்கார்ந்தபடியே நம்மால் காண முடிகிறது.

சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் சார்ந்த தகவல்களை பெற டிவி, வானொலி போன்றவற்றை மக்கள் நம்பியிருந்தனர். ஆனால் தற்போது அனைத்து விதமான தகவல்களையும் மொபைல், லேப்டாப் போன்றவை மூலம் எளிதாக கிடைக்கிறது. இதில் அரசியல், சினிமா, உலகம் சார்ந்த செய்திகள் அதிகமாக மக்களிடையே சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த செய்திகளில் 70 சதவீதத்திற்கும் மேலாக பொய்யான தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக டிவிட்டரில் கடந்த 2016-17 ஆண்டுகளில் 1,26,000 மக்களின் கணக்குகள் கண்காணிக்கப்பட்டது.

இதில் உண்மையான தகவல்களை விட பொய்யான தகவல்கள் பகிரப்படுவது தெரியவந்துள்ளது. உண்மையை விட பொய்யை தான் தற்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பு மக்களும் நம்புகின்றனர். அரசியல்வாதி மற்றும் சினிமா பிரபலங்கள் சொல்வதை கண்மூடி தனமாக மக்கள் நம்புகின்றனர். இது போன்ற பொய்யான தகவல்களை பகிரும்போது அது உண்மையா பொய்யா என்பதை ஆராயாமல் பகிரப்படுவதாக அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

டிவிட்டரில் உண்மையானதை விட பொய்யான தகவல்களை மக்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல்