ads
உலகில் மிக வேகமாக கடலுக்குள் மூழ்கும் நகரம்
வேலுசாமி (Author) Published Date : Aug 14, 2018 10:37 ISTWorld News
உலக அளவில் கடல்களின் சராசரி நீர் மட்டம் 21ஆம் நூற்றாண்டில் மட்டும் ஆண்டுக்கு 0.3மீ - 2.5மீ அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. பருவ கால மாற்றங்கள், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவை கடல் மட்டம் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. இதில் 1971ஆம் ஆண்டு முதல் 2010ஆண்டு வரை 39 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிக அளவு கடல் மட்டம் அதிகரித்துள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration) தெரிவித்துள்ளது.
கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் கடற்புற பகுதிகள் அரிக்கப்பட்டு கடலில் மூழ்கி வருகின்றன. வட துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் வெப்பநிலை அதிகரிப்பதால் அதிக அளவில் உருகி வருகின்றன. இதனால் கடற்கரையில் அமைந்துள்ள நகரங்கள் தற்போது கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. தற்போது உலகில் மிக வேகமாக கடலில் மூழ்கும் நகரங்களில் ஜகார்த்தா முதலிடத்தில் உள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. சுற்றுலா தலமாகவும் விளங்கும் இந்நகரில் தற்போது 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து, முஸ்லீம், பௌத்தம், கத்தோலிக்கர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வரும் இந்நகரமானது மிகவேகமாக கடலில் மூழ்கி வருகின்றன. கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதால் இந்நகரம் ஒரு வருடத்திற்கு 1.5செமீ வரை கடலில் மூழ்கி வருகிறது.
தற்போது வரை இந்நகரின் பாதி நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கி விட்டன. இந்நகரில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் முதலியவை தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றன. இந்நகரின் சில பகுதிகளில் ஆண்டிற்கு 25செமீ வரையிலும் கடல் மட்டம் அதிகரிப்பதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்து கொண்டே வருவதால் வரும் 2050க்குள் இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா முழுவதும் கடலில் மூழ்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.