ads
இந்தோனோஷிய நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ கடந்தது
ராசு (Author) Published Date : Aug 08, 2018 18:06 ISTWorld News
உலகில் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாலி மற்றும் லாம்பொக் நகரங்களில் கடந்த 5ஆம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரெனெ ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் ஏராளமானோர் கட்டிடங்களுக்குள் சிக்கி தவித்தனர். வீடு மற்றும் அடிப்படை தேவைகளை இழந்து லட்சக்கணக்கான மக்கள் தவித்து வந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் 7.0 என பதிவு செய்யப்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கம் இந்தோனோஷியாவின் பாலி மற்றும் லாம்பொக் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள நகரங்களையும் தாக்கியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் மீட்பு குழுவினரால் உயிரிழப்புகள் எண்ணிக்கையை உறுதியாக சொல்ல முடியவில்லை.
தற்போது வரை 150 க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உயிரிழப்புகள் எண்ணிக்கை 91 ஆக இருந்த நிலையில் தற்போது 150ஐ கடந்துள்ளது. ஆனாலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்தும், காணாமல் போன மக்களை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காணாமல் போனோரை கண்டுபிடிக்க பணியாளர்கள் போதாதால் மீட்பு குழுவினர் ஆட்கள் அதிகமாக தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.