ads

இந்தோனேசியாவை கதிகலங்க வைத்த பயங்கர நிலநடுக்கம் - 91 பேர் பலி

இந்தோனேசியாவில் சுற்றுலா தலங்களான பாலி மற்றும் லாம்பொக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் சுற்றுலா தலங்களான பாலி மற்றும் லாம்பொக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான்காவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் சுமார் 300 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் மொத்தமாக 17,508 தீவுகள் அடங்கியுள்ளது. உலகில் அதிக அளவிலான முஸ்லீம் மத மக்களும் இங்கு தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் தற்போது மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சுற்றுலா தளங்களில் மிக முக்கியமாக கருதப்படும் லாம்பாக் மற்றும் பாலி என்ற இரண்டு தீவுகளில் 7.0 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எரிமலைகளால் சூழப்பட்ட இந்த தீவுகளில் நேற்று மாலை நேரம் முதல் நிலநடுக்கம் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து 5.0, 5.2, 5.5 ரிக்டர் அளவுகளால் தாக்கிய இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் கட்டிடங்களில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர். இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 91 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏராளமானோர் பலத்த காயங்களுடன் சாலைகளில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக மீட்பு பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. நேற்று மாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கட்டிடத்திற்குள் சிக்கி கொண்ட மக்கள் தங்களை காப்பாற்றுமாறு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

இந்தோனேசியாவை கதிகலங்க வைத்த பயங்கர நிலநடுக்கம் - 91 பேர் பலி