ads

ஐரோப்பா துணைக்கோளில் உயிரினங்கள் வாழ இயலும் ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு

Researchers Says Jupiter

Researchers Says Jupiter's Ice Planet Moon Europe Having Living Suituation, Image Credit - NASA

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் விளங்குகிறது. வியாழன் கோளுக்கு 69 துணை கிரகங்கள் உள்ளது. இதில் கலிலியோ கோள்களில் நான்காவது சிறிய கோளும், ஆறாவதாக அருகில் இருக்கும் கோளாகவும் ஐரோப்பா துணை கோள் இருக்கிறது. இந்த கோளை 1610 ஆம் ஆண்டு கலிலியோ மற்றும் சைமன் மாரியசு ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

இந்த கோளுக்கு ஆய்வாளர் சைமன் மாரியசு 'ஐரோப்பா' என்று பெயர் வைத்துள்ளார். (இந்த பெயர் கிரேக்க உயர்குடி பெண்ணின் பெயராகும். இவர் இடி மின்னல் அரசன் என்றழைக்கப்படும் சூயஸ் என்பவருடன் நட்பு கொண்டு கிரீட் பிரதேசத்தின் அரசியானாள்.) இந்த கோளானது பூமியை விட சிறியதாக இருந்தாலும் இந்த கிரகம் முழுவதும் பனி பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தை பிரேசில் நாட்டின் சா பாலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்கள் பூமியுடன் ஒத்து போவதாக தெரிவித்துள்ளனர்.  பூமியில் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பெர்க் என்ற நகரத்தில் அருகே உள்ள தங்க சுரங்கத்தில் சுமார் 2.8 கிலோ மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளிபடாத அந்த இடத்தில தண்ணீரில் பாக்டிரியாக்கள் இருப்பது தெரியவந்தது.

இதே போல் ஐரோப்பா துணை கிரகத்திலும் இது போன்ற நிலை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பா கிரகத்தின் மேற்பரப்பில் முழுவதும் பனிக்கட்டியால் நிறைந்துள்ளது. ஆனால் இதன் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் போன்ற நீர் மறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஐரோப்பா துணைக்கோளில் உயிரினங்கள் வாழ இயலும் ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு