ads
ஆப்பிரிக்காவில் நரபலி என்ற பெயரில் 675 பேரை கொன்ற மத போதகர்
வேலுசாமி (Author) Published Date : Jul 20, 2018 10:26 ISTWorld News
நமது நவீன உலகில் இன்னும் ஏதாவது ஒரு மூளையில் நரபலி என்ற கொடூர சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவன் மீது நம்பிக்கையில்லாமல் சாத்தானை வழிபடும் மதபோதகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நரபலியில் பலியானவர்கள் பெரும்பாலும் சிறு சிறு குழந்தைகளாகவே காணப்படுகின்றனர்.
சமீபத்தில் பெரு நாட்டில் 140 குழந்தைகள் மற்றும் 200 இலாமா உயிரினங்களின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவங்களில் பெரும்பாலும் ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர்களை இழந்த சிறுவர்கள், அனாதை சிறுவர்கள் போன்ற பல குழந்தைகள் இது போன்ற துயர சம்பவங்களுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள கனா என்ற பகுதியில் முகமூடி அணிந்த மத போதகர் ஒருவர் 600 சிறுவர்களை நரபலிக்காக பலிகொடுத்ததாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு சாத்தான் மற்றும் மத சடங்குகளில் ஈடுபாடுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் 17 வருடங்களாக சாத்தானுடன் வழிபடுவதாகவும், தான் பிறக்கும் போதே தீய சக்திகளுடன் பிறந்தேன், இதனால் எனது சக்திகளை தக்க வைத்து கொள்ள நரபலி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது வரை பலியான 675 நபர்களில் பெரும்பாலும் சிறுவர்கள் தான் அதிகம் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சம்பவங்கள் எந்த பகுதியில் நடைபெற்றது, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதா என்பது குறித்து அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.