ads
அதிக வேலைப்பளு காரணமாக சீனாவில் கடந்த ஆண்டில் மட்டும் 246 போலீசார் உயிரிழப்பு
வேலுசாமி (Author) Published Date : Apr 06, 2018 15:55 ISTWorld News
காவல் துறை என்பது ஒரு நகர்த்தில் சட்டத்தை காக்கவும், சட்டை ஒழுங்கை சீர்படுத்தவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. காவல் துறையினரின் அதிகார எல்லைக்கேற்ப பொதுமக்களை காத்தல், கூட்டங்கள் மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்துதல், குற்றவிசாரணை புரிதல் போன்றவற்றிற்காகவும் அமைக்கப்பட்டது. நாட்டை நல்வழிப்படுத்துவதில் காவல் துறையினரின் பங்கு இன்றியமையாதது. காவல் துறையினரின் 24 மணிநேரமும் பொதுமக்களுக்காகவும், சட்டத்தை பாதுகாக்கவும் அயராது உழைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது காவல் துறை என்றால் நமது நினைவிற்கு வருவது சாலையோரங்களில் லைசன்ஸ், இன்சூரன்ஸ் போன்றவற்றை காண்பிக்க சொல்லி பணம் பிடுங்குவது, எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் பணத்தை (லஞ்சத்தை) பெற்றுக்கொண்டு குற்றவாளியை விட்டுவிடுவது, ஏழை, பணக்காரனிடையே வேறுபாடு பார்ப்பது மற்றும் தொப்பையுடன் ஒரு அறையில் உட்கார்ந்து தூங்குவது போன்ற செயல்கள் மட்டுமே.
ஆனால் 100 காவல் துறையினரிடையே 10 காவல் துறையினர் செய்யும் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களால் ஒட்டுமொத்த துறையினரும் பாதிப்படைகின்றனர். இத்தகைய செயல்களுக்கு பெரும்பாலும் காவல் துறையினரின் வேலைப்பளுவும், குடும்ப சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. காவல் துறையினர் வெயில், மழை, குளிர் போன்றவை பாராது 24 மணிநேரமும் உழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாட்டின் பல்வேறு நாடுகளில் ஏராளமான போலீசார் மரணம் அடைகின்றனர்.
இதற்கு பெரும்பாலும் அவர்களின் வேலைபளுவே காரணமாக அமைகிறது. சீனாவில் கடந்த 2017-இல் மட்டும் 361 காவல் துறையினர் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் 40 வயதுக்கும் குறைவானவர்களே. குறைவான வயதில் காவல் துறையினர் மரணம் அடைவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் மூலம் பெரும்பாலும் காவல் துறையினர் குற்றவாளியை பிடிக்கும் போது மரணம் அடைவதில்லை.
இதற்கு மாறாக காவல் துறையினரின் அதிக வேலைப்பளு காரணமாக 246 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது. சீனாவில் காவல் துறையினர் ஒரு நாளில் 15 மணிநேரம் வேலை பார்க்கின்றனர். இதனை அடுத்து தற்போது காவல் துறையினரின் நலனுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு துறை பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. காவல் துறையினரின் பென்ஷன் பணமும், இன்சூரன்சும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் காவல் துறையினரின் அதிகப்படியான வேலைப்பளுவை குறைப்பதற்கு அறிவியல் சார்ந்த ஆலோசனைகள் வழங்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மக்களுக்காக நாட்டுக்காக உழைக்கும் காவல் துறையினரின் குடும்பங்களை அரசாங்கமும், பொது மக்களும் முறையாக பாதுகாத்தால் அவர்கள் லஞ்சம், ஊழல் போன்றவை செய்யும் அவசியமும் இருக்காது, நாடும், பொதுமக்களும் பாதுகாக்க படுவார்கள்.