ads
ஆஸ்திரேலியா ஸ்டராபெர்ரி பழங்களுக்குள் ஊசி
ராசு (Author) Published Date : Sep 25, 2018 11:45 ISTWorld News
உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பழ வகைகளுள் ஒன்று ஸ்ட்ராபெரி. இந்த ஸ்ட்ராபெரி பழங்கள் உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இதனை கொண்டு, ஜீஸ், ஐஸ் க்ரீம், சாக்லேட், மில்க் ஷேக் போன்ற பல வகையான உணவு பொருட்களிலும் சுவைக்காக சேர்க்கின்றனர். சுவைக்காக மட்டுமல்லாமல் நறுமணத்திற்காகவும் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பர்பியூம், லிப்ஸ்டிக் போன்ற இதர கைவினை பொருட்களுக்கும் உபயோகப்படுத்துகின்றனர்.
இதனால் ஸ்ட்ராபெரி பழங்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஸ்ட்ராபெரி பழங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலியா ஸ்ட்ராபெரி பழங்கள் மீதான பயம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்றது. இதனால் ஸ்டராபெர்ரி பழங்களை வாங்குவதையே ஏராளமானோர் தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் ஆஸ்திரேலிய ஸ்டராபெர்ரி பழங்களில் ஊசி இருப்பது தான்.
ஆஸ்திரேலியாவில் மட்டும் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட் கடைகளில் இருக்கும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து உலகம் முழுவதும் ஸ்ட்ராபெரி பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஆஸ்திரேலியா தவிர நியூசிலாந்திலும் ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருப்பதாக தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் ஆஸ்திரேலியா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்து கொண்டே வருவதால் என்ன செய்வதறியாமல் திணறி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு, இது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 72,000 டாலரை சன்மானமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 53 லட்சம். ஆனால் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று கண்டுபிடித்தால் அவருக்கு 10 அல்லது 15 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஸ்டராபெர்ரி பழங்களில் ஊசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தால் தொழில்துறை மற்றும் விவசாயிகளுக்கு சுமார் 130மில்லியன் டாலர் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஸ்ட்ராபெரி பழங்களை வாங்குவதை தவிர்த்து வருவதால் டன் கணக்கில் ஸ்ட்ராபெரி பழங்களை குப்பைகளில் கொட்டுகின்றனர். இதனால் ஆஸ்திரேலியா தவிர இதர நாடுகளும் ஸ்ட்ராபெரி பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு முறை சோதித்து பார்க்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது போன்ற கொடூர செயலை செய்தது யார் என்று தெரியவில்லை. இது கண்டிப்பாக தீவிரவாத செயல் என்று ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலை சிலர் விளையாட்டிற்காக செய்திருக்கலாம் என்றும், இதர நிறுவனங்கள் மீது இருக்கும் போட்டி, பொறாமை போன்றவற்றால் நிறுவனங்கள் மூலம் இந்த தவறுகள் நடந்திருக்கலாம் என்று யூகித்துள்ளனர். பெரும்பாலான ஊசி இருந்த ஸ்ட்ராபெரி பழங்களை கண்டுபிடித்து அழித்து விட்டாலும் இந்த செய்தியானது தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
"Within 3 days we lost it all." #Strawberry farmers across #Australia are facing devastating losses, as the needle sabotage crisis forces them to dump their crop. Video: Donnybrook Berries. https://t.co/m8FV7FXGNh … pic.twitter.com/agGz9ETJ1p
— Nancy Mitchell (@NancyWonderful) September 18, 2018