ads

நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை கொள்ள நியூசிலாந்து அரசு முடிவு

நியூசிலாந்தில் சமீபத்தில் ஏராளமான கால்நடைகளில் நிமோனியா நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டிரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சமீபத்தில் ஏராளமான கால்நடைகளில் நிமோனியா நோய்களை உண்டாக்கக்கூடிய பாக்டிரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை அழிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மனிதர்கள் கடைசியாக குடியேறிய மிகப்பெரிய நிலப்பகுதிகளுள் ஒன்றான நியூசிலாந்து பசுபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் கடைக்கோடியில் அமைந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நாடான நியூசிலாந்தில் கூர்மையான மலை உச்சிகளும், அடிக்கடி எரிமலை வெடிப்புகள் மற்றும் கண்டப்பெயர்வு போன்றவையும் அடிக்கடி நிகழ்கிறது. மனிதர்கள் குடியேற்றம் அடைந்த பிறகு அதிகப்படியான பாலூட்டிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் தற்போது நியூசிலாந்து, அதிகப்படியான பால் உற்பத்தி செய்யும் நாடுகளுள் முதலிடம் வகித்து வருகிறது.

சுமார் 66 லட்சம் பசுமாடுகளை கொண்டுள்ள இந்நாட்டில் உலகின் 3 சதவீதம் நியூசிலாந்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் நியூசிலாந்தின் ஏராளமான பசுமாடுகளை நிமோனியா போன்ற நோய்களை உண்டாகக்கூடிய மைக்கோபிளாஸ்மா போவிஸ் என்ற பாக்டிரியா தாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. முன்னதாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்  இந்த நோய் காரணிகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நியூஸிலாந்திலும் கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியே போனால் நியூசிலாந்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் வேகமாக பரவி கால்நடை இனமே அழியும் அபாயம் உள்ளதால் மைக்கோபிளாஸ்மா போவிஸ் பாக்டிரியாவால் தாக்கப்பட்ட பசுக்களை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நோய் தாக்கப்பட்ட பசுமாடுகள், தாக்கப்படாத பசுமாடுகள் உள்பட 1.5 லட்சம் பசுமாடுகளை அழிக்க முடிவு செய்துள்ளனர். இதில் நோய் தாக்கப்பட்ட பசுமாடுகளை எரிக்கவும், நோய் தாக்கப்படாத பசுமாடுகளை கொன்று உரமாக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து அந்நாட்டின் அதிபர் ஜெசிந்தா அடேர்ன் கூறுகையில் "இது போன்ற பசுக்கள் கொல்லப்படும் முடிவு நிச்சயம் அனைவருக்கும் வேதனை அளிக்கக்கூடிய முடிவு தான். ஆனால் நோய் பரவுதலை தடுக்கவும், கால்நடை வளத்தை காக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நியூசிலாந்தில் கால்நடை வளம் முற்றிலும் அழிந்து போகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

நோய் பரவுதலை தடுக்க 1.5 லட்சம் பசுக்களை கொள்ள நியூசிலாந்து அரசு முடிவு