ads

சந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்

சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் நான்கு செமீ அளவுக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. இதனால் வருங்காலத்தில் ஒரு மணிநேரம் என்பது 25மணிநேரமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் நான்கு செமீ அளவுக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. இதனால் வருங்காலத்தில் ஒரு மணிநேரம் என்பது 25மணிநேரமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் காலநிலை, பருவகாலங்கள் போன்ற இயற்கை மாற்றங்களுக்கு சந்திரனின் நகர்வும், பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பதே காரணமாக அமைகிறது. இதனால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பதே ஆய்வாளர்களுக்கு குழப்பமாக உள்ளது. சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் பூமிக்கு அருகில் இருந்ததாக கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது.  இதனால் அன்றைய சூழ்நிலையில் ஒரு நாள் என்பது 18 மணிநேரம் 40 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 4 செமீ அளவுக்கு பூமியை சென்றுள்ளது.

இதனால் தற்போது இருக்கும் தூரத்தை வைத்து பார்க்கும் போது சந்திரன் கிட்டத்தட்ட 44ஆயிரம் கிமீ தூரம் வரை பூமியை விட்டு விலகி வந்துள்ளது. தற்போது பூமி தன்னை தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலத்தை ஒரு நாளாக வைத்து, ஒரு நாள் என்பது 24 மணிநேரமாக எண்ணி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் 4செமீ வரை இடம்பெயர்வதால் இன்னும் 100 மில்லியன் ஆண்டுகள் கழித்து பார்த்தல் ஒரு நாள் என்பது 25 மணிநேரமாக மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மக்களில் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லை, 24 மணிநேரம் எப்போது தான் தீரும் என பல வகைகளாக வேதனைப்பட்டு வருகின்றனர். இந்த செய்தி 24 மணிநேரம் போதாது என்று தெரிவிக்கும் சந்ததியினருக்கு நிச்சயம் நல்ல செய்தி தான். ஆனால் அன்றைய காலகட்டத்தில் பூமியின் நிலைமையை தற்போதுள்ள மனிதர்கள் தலைகீழாக மாற்றியிருப்பார்கள். அப்போது மனித இனம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சந்திரனின் நகர்வால் ஒரு நாள் என்பது வருங்காலத்தில் 25 மணிநேரமாகும்